உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 34
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

யாத்திராகமம் முக்கியக் குறிப்புகள்

      • புதிய கற்பலகைகளை மோசே தயார் செய்கிறார் (1-4)

      • யெகோவாவின் மகிமையை மோசே பார்க்கிறார் (5-9)

      • ஒப்பந்தத்தின் விவரங்கள் மறுபடியும் சொல்லப்படுகின்றன (10-28)

      • மோசேயின் முகம் ஒளிவீசுகிறது (29-35)

யாத்திராகமம் 34:1

இணைவசனங்கள்

  • +யாத் 32:19; உபா 9:17
  • +உபா 10:1
  • +உபா 9:10

யாத்திராகமம் 34:2

இணைவசனங்கள்

  • +யாத் 19:20; 24:12

யாத்திராகமம் 34:3

இணைவசனங்கள்

  • +யாத் 19:12, 13

யாத்திராகமம் 34:5

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தான் எப்படிப்பட்டவர் என்று சொன்னார்.”

இணைவசனங்கள்

  • +அப் 7:38
  • +யாத் 6:3; 33:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 10/2020, பக். 2-3

யாத்திராகமம் 34:6

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “கனிவும்.”

  • *

    வே.வா., “நம்பிக்கையானவர்.”

இணைவசனங்கள்

  • +லூ 6:36
  • +யாத் 22:27; 2நா 30:9; நெ 9:17; சங் 86:15; யோவே 2:13
  • +எண் 14:18; 2பே 3:9
  • +எரே 31:3; புல 3:22; மீ 7:18
  • +சங் 31:5; ரோ 2:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 276-278

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2021, பக். 2-3

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 7

    காவற்கோபுரம் (படிப்பு),

    9/2017, பக். 8

    விழித்தெழு!,

    1/2012, பக். 6-7

    காவற்கோபுரம்,

    10/1/2009, பக். 28

    5/15/2005, பக். 23-25

    1/15/2002, பக். 13-15, 17-18

    10/1/1998, பக். 8, 12-13

    2/1/1991, பக். 4

    அறிவு, பக். 28-29

யாத்திராகமம் 34:7

இணைவசனங்கள்

  • +தானி 9:4
  • +சங் 103:12; ஏசா 55:7; எபே 4:32; 1யோ 1:9
  • +உபா 32:35; யோசு 24:19; ரோ 2:5; 2பே 2:4; யூ 14, 15
  • +யாத் 20:5; உபா 30:19; 1சா 15:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 114-117

    காவற்கோபுரம்,

    10/1/2009, பக். 28

    5/15/2005, பக். 23-25

    1/15/2002, பக். 13-15, 17-18

    2/1/1991, பக். 4, 6-7

    2/1/1989, பக். 6

    அறிவு, பக். 28-29

யாத்திராகமம் 34:9

இணைவசனங்கள்

  • +யாத் 33:14
  • +யாத் 32:9; 33:3
  • +எண் 14:19

யாத்திராகமம் 34:10

இணைவசனங்கள்

  • +2சா 7:23; சங் 147:19, 20
  • +யாத் 33:16; உபா 10:21

யாத்திராகமம் 34:11

இணைவசனங்கள்

  • +யாத் 19:5, 6; உபா 12:28
  • +யாத் 3:8; 33:2; உபா 7:1

யாத்திராகமம் 34:12

இணைவசனங்கள்

  • +உபா 7:2
  • +யாத் 23:32, 33

யாத்திராகமம் 34:13

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யாத் 23:24; உபா 12:3

யாத்திராகமம் 34:14

இணைவசனங்கள்

  • +யாத் 20:3; 1கொ 10:14; 1யோ 5:21
  • +யோசு 24:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 125

    தூய வணக்கம், பக். 164-165

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2489-2490

    காவற்கோபுரம்,

    10/15/2002, பக். 28

    9/15/1995, பக். 8-9

யாத்திராகமம் 34:15

இணைவசனங்கள்

  • +1கொ 10:20
  • +எண் 25:2; 2கொ 6:14

யாத்திராகமம் 34:16

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அவற்றைக் கும்பிட்டு எனக்குத் துரோகம் பண்ணும்படி செய்துவிடுவார்கள்.”

இணைவசனங்கள்

  • +எஸ்றா 9:2
  • +உபா 7:4; 31:16; நியா 2:17; 8:33; 1ரா 11:2; நெ 13:26; சங் 106:28

யாத்திராகமம் 34:17

இணைவசனங்கள்

  • +யாத் 32:8; லேவி 19:4

யாத்திராகமம் 34:18

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +லேவி 23:6
  • +யாத் 23:15

யாத்திராகமம் 34:19

இணைவசனங்கள்

  • +யாத் 13:2; 22:30; லூ 2:23

யாத்திராகமம் 34:20

இணைவசனங்கள்

  • +யாத் 13:15; எண் 18:15, 16

யாத்திராகமம் 34:21

இணைவசனங்கள்

  • +உபா 5:12

யாத்திராகமம் 34:22

அடிக்குறிப்புகள்

  • *

    கூடாரப் பண்டிகை என்றும் இது அழைக்கப்பட்டது.

இணைவசனங்கள்

  • +யாத் 23:16; லேவி 23:34

யாத்திராகமம் 34:23

இணைவசனங்கள்

  • +உபா 16:16

யாத்திராகமம் 34:24

இணைவசனங்கள்

  • +யாத் 34:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/1/1998, பக். 20

யாத்திராகமம் 34:25

இணைவசனங்கள்

  • +யாத் 23:18
  • +யாத் 12:10; எண் 9:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/1/1991, பக். 22

யாத்திராகமம் 34:26

இணைவசனங்கள்

  • +எண் 18:8, 12; உபா 26:2; நீதி 3:9
  • +யாத் 23:19; உபா 14:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 27

யாத்திராகமம் 34:27

இணைவசனங்கள்

  • +யாத் 24:4; உபா 31:9, 11
  • +யாத் 24:8; உபா 4:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    நெருங்கி வாருங்கள், பக். 179-181

    காவற்கோபுரம்,

    6/15/2012, பக். 26

யாத்திராகமம் 34:28

இணைவசனங்கள்

  • +உபா 9:18
  • +யாத் 31:18; உபா 10:2

யாத்திராகமம் 34:29

இணைவசனங்கள்

  • +யாத் 32:15

யாத்திராகமம் 34:30

இணைவசனங்கள்

  • +2கொ 3:7

யாத்திராகமம் 34:32

இணைவசனங்கள்

  • +யாத் 24:3; உபா 1:3

யாத்திராகமம் 34:33

இணைவசனங்கள்

  • +2கொ 3:13

யாத்திராகமம் 34:34

இணைவசனங்கள்

  • +2கொ 3:16
  • +உபா 27:10

யாத்திராகமம் 34:35

இணைவசனங்கள்

  • +2கொ 3:7, 13

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

யாத். 34:1யாத் 32:19; உபா 9:17
யாத். 34:1உபா 10:1
யாத். 34:1உபா 9:10
யாத். 34:2யாத் 19:20; 24:12
யாத். 34:3யாத் 19:12, 13
யாத். 34:5அப் 7:38
யாத். 34:5யாத் 6:3; 33:19
யாத். 34:6லூ 6:36
யாத். 34:6யாத் 22:27; 2நா 30:9; நெ 9:17; சங் 86:15; யோவே 2:13
யாத். 34:6எண் 14:18; 2பே 3:9
யாத். 34:6எரே 31:3; புல 3:22; மீ 7:18
யாத். 34:6சங் 31:5; ரோ 2:2
யாத். 34:7தானி 9:4
யாத். 34:7சங் 103:12; ஏசா 55:7; எபே 4:32; 1யோ 1:9
யாத். 34:7உபா 32:35; யோசு 24:19; ரோ 2:5; 2பே 2:4; யூ 14, 15
யாத். 34:7யாத் 20:5; உபா 30:19; 1சா 15:2
யாத். 34:9யாத் 33:14
யாத். 34:9யாத் 32:9; 33:3
யாத். 34:9எண் 14:19
யாத். 34:102சா 7:23; சங் 147:19, 20
யாத். 34:10யாத் 33:16; உபா 10:21
யாத். 34:11யாத் 19:5, 6; உபா 12:28
யாத். 34:11யாத் 3:8; 33:2; உபா 7:1
யாத். 34:12உபா 7:2
யாத். 34:12யாத் 23:32, 33
யாத். 34:13யாத் 23:24; உபா 12:3
யாத். 34:14யாத் 20:3; 1கொ 10:14; 1யோ 5:21
யாத். 34:14யோசு 24:19
யாத். 34:151கொ 10:20
யாத். 34:15எண் 25:2; 2கொ 6:14
யாத். 34:16எஸ்றா 9:2
யாத். 34:16உபா 7:4; 31:16; நியா 2:17; 8:33; 1ரா 11:2; நெ 13:26; சங் 106:28
யாத். 34:17யாத் 32:8; லேவி 19:4
யாத். 34:18லேவி 23:6
யாத். 34:18யாத் 23:15
யாத். 34:19யாத் 13:2; 22:30; லூ 2:23
யாத். 34:20யாத் 13:15; எண் 18:15, 16
யாத். 34:21உபா 5:12
யாத். 34:22யாத் 23:16; லேவி 23:34
யாத். 34:23உபா 16:16
யாத். 34:24யாத் 34:11
யாத். 34:25யாத் 23:18
யாத். 34:25யாத் 12:10; எண் 9:12
யாத். 34:26எண் 18:8, 12; உபா 26:2; நீதி 3:9
யாத். 34:26யாத் 23:19; உபா 14:21
யாத். 34:27யாத் 24:4; உபா 31:9, 11
யாத். 34:27யாத் 24:8; உபா 4:13
யாத். 34:28உபா 9:18
யாத். 34:28யாத் 31:18; உபா 10:2
யாத். 34:29யாத் 32:15
யாத். 34:302கொ 3:7
யாத். 34:32யாத் 24:3; உபா 1:3
யாத். 34:332கொ 3:13
யாத். 34:342கொ 3:16
யாத். 34:34உபா 27:10
யாத். 34:352கொ 3:7, 13
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
யாத்திராகமம் 34:1-35

யாத்திராகமம்

34 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ உடைத்துப்போட்ட+ முதல் இரண்டு கற்பலகைகளைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள்.+ முதல் கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை இந்தக் கற்பலகைகளில் நான் எழுதுவேன்.+ 2 நீ நாளை காலையிலேயே சீனாய் மலை உச்சிக்கு ஏறிவந்து அங்கே என் முன்னிலையில் நிற்க வேண்டும். அதற்காகத் தயாராகிக்கொள்.+ 3 ஆனால், யாரும் உன்னோடு வரக் கூடாது. மலைமேல் வேறு யாரையுமே நான் பார்க்கக் கூடாது. அந்த மலைக்கு முன்னால் ஆடுமாடுகள்கூட மேயக் கூடாது”+ என்றார்.

4 அதனால், முதல் கற்பலகைகளைப் போன்ற இரண்டு கற்பலகைகளை மோசே வெட்டி எடுத்துக்கொண்டார். பின்பு விடியற்காலையிலேயே எழுந்து, யெகோவா சொன்னபடி அந்த இரண்டு கற்பலகைகளையும் கையில் எடுத்துக்கொண்டு சீனாய் மலைமேல் ஏறிப்போனார். 5 யெகோவா மேகத்தில் இறங்கி வந்து+ மோசேக்குப் பக்கத்தில் நின்றார். பின்பு, யெகோவா என்ற தன்னுடைய பெயரைப் பற்றி அறிவித்தார்.*+ 6 யெகோவா மோசேயின் முன்னால் கடந்துபோகும்போது, “யெகோவா, யெகோவா, இரக்கமும்+ கரிசனையும்*+ உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ உண்மையுள்ளவர்,*+ 7 ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கு மாறாத அன்பைக் காட்டுபவர்,+ குற்றத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிப்பவர்.+ ஆனால், குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விடமாட்டார்.+ தகப்பன்கள் செய்த குற்றத்துக்காக அவர்களுடைய மகன்களையும் பேரன்களையும் மூன்றாம் நான்காம் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களையும் தண்டிப்பார்”+ என்று சொன்னார்.

8 உடனே மோசே சாஷ்டாங்கமாக விழுந்தார். 9 பின்பு, “யெகோவாவே, என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், தயவுசெய்து எங்களோடு வாருங்கள், எங்கள் நடுவில் இருங்கள்.+ யெகோவாவே, நாங்கள் பிடிவாதக்காரர்களாக இருந்தாலும்,+ எங்கள் குற்றத்தையும் பாவத்தையும் மன்னியுங்கள்.+ எங்களை உங்களுடைய ஜனங்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார். 10 அதற்கு அவர், “இதோ, நான் ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். இதுவரை இந்த உலகத்தில் நடக்காத அற்புதங்களை உங்கள் எல்லாருக்கும் முன்னால் நடத்திக் காட்டுவேன்.+ வேறு எந்தத் தேசத்தார் முன்பாகவும் செய்யாத அதிசயங்களைச் செய்வேன். யெகோவாவாகிய நான் உங்களுக்காகச் செய்யும் பிரமிப்பூட்டுகிற செயல்களை உங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் பார்ப்பார்கள்.+

11 இன்று நான் உங்களுக்குச் சொல்லும் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்.+ எமோரியர்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் எல்லாரையும் உங்களைவிட்டுத் துரத்துவேன்.+ 12 நீங்கள் போய்ச் சேருகிற தேசத்தின் குடிமக்களோடு ஒப்பந்தம் செய்யாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்.+ இல்லாவிட்டால், நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.+ 13 அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போடுங்கள், பூஜைத் தூண்களை* தகர்த்துப்போடுங்கள், பூஜைக் கம்பங்களை* உடைத்துப்போடுங்கள்.+ 14 வேறொரு தெய்வத்தை நீங்கள் வணங்கக் கூடாது.+ யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுள் என்பது எல்லாருக்கும் தெரியும். உண்மையில், அவர் முழு பக்தியை எதிர்பார்க்கும் கடவுள்.+ 15 மற்ற தேசத்து ஜனங்களோடு ஒப்பந்தம் செய்யாதபடி ஜாக்கிரதையாக இருங்கள். ஏனென்றால், அவர்கள் என்னை வணங்காமல் தங்களுடைய தெய்வங்களைக் கும்பிட்டு, அவற்றுக்குப் பலி செலுத்தும்போது,+ உங்களையும் கூப்பிடுவார்கள். அவர்கள் பலி செலுத்துவதை நீங்களும் சாப்பிடுவீர்கள்.+ 16 அதன்பின், அவர்களுடைய மகள்களை உங்களுடைய மகன்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பீர்கள்.+ அவர்களுடைய மகள்கள் தங்களுடைய தெய்வங்களைக் கும்பிடுவது போதாதென்று, உங்கள் மகன்களும் அவற்றைக் கும்பிடும்படி செய்துவிடுவார்கள்.*+

17 நீங்கள் சிலைகளைச் செய்து வணங்கக் கூடாது.+

18 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையை நீங்கள் கொண்டாட வேண்டும்.+ நான் உங்களுக்குக் கட்டளை கொடுத்தபடியே, ஆபிப்* மாதத்தின் குறிக்கப்பட்ட தேதிகளில், புளிப்பில்லாத ரொட்டிகளை ஏழு நாட்களுக்குச் சாப்பிட வேண்டும்.+ ஏனென்றால், ஆபிப் மாதத்தில்தான் நீங்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தீர்கள்.

19 உங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் பிள்ளைகளும் சரி, உங்கள் ஆடுமாடுகள் போடுகிற முதல் ஆண்குட்டிகளும் கன்றுகளும் சரி, எனக்குத்தான் சொந்தம்.+ 20 கழுதையின் முதல் குட்டியை, ஒரு ஆட்டைக் கொடுத்து நீங்கள் மீட்க வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால், அதன் கழுத்தை முறிக்க வேண்டும். உங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தைகளையும் நீங்கள் மீட்டுக்கொள்ள வேண்டும்.+ யாருமே என் முன்னால் வெறுங்கையோடு வரக் கூடாது.

21 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்ய வேண்டும், ஏழாம் நாள் உங்களுக்கு ஓய்வுநாள்.+ உழுகிற காலத்திலும் சரி, அறுக்கிற காலத்திலும் சரி, ஏழாம் நாளில் நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டும்.

22 உங்களுடைய கோதுமையின் முதல் விளைச்சலைச் செலுத்தி, வாரங்களின் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். வருஷத்தின் முடிவில், சேகரிப்புப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+

23 உண்மை எஜமானும் இஸ்ரவேலின் கடவுளுமான யெகோவாவின் முன்னிலையில் ஆண்கள் எல்லாரும் வருஷத்துக்கு மூன்று தடவை வர வேண்டும்.+ 24 மற்ற தேசத்தாரை உங்கள் முன்பிருந்து நான் துரத்திவிடுவேன்.+ உங்கள் எல்லையை விரிவாக்குவேன். வருஷத்துக்கு மூன்று தடவை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் சன்னிதிக்கு நீங்கள் போகும்போது, யாரும் வந்து உங்கள் தேசத்தைப் பிடிக்க மாட்டார்கள்.

25 எனக்காகச் செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளிப்பு சேர்க்கப்பட்ட எதனுடனும் சேர்த்து செலுத்தக் கூடாது.+ பஸ்கா பண்டிகையின்போது நீங்கள் செலுத்தும் பலியைக் காலைவரை வைத்திருக்கக் கூடாது.+

26 உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+

ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது”+ என்றார்.

27 அதோடு யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை நீ எழுதி வைத்துக்கொள்.+ ஏனென்றால், இந்த வார்த்தைகளின்படியே நான் உன்னோடும் இஸ்ரவேலர்களோடும் ஒப்பந்தம் செய்கிறேன்”+ என்றார். 28 அங்கு மோசே 40 நாட்கள் இரவும் பகலும் யெகோவாவுடன் இருந்தார். அவர் உணவு சாப்பிடவும் இல்லை, தண்ணீர் குடிக்கவும் இல்லை.+ கடவுள் அந்தக் கற்பலகைகளில் ஒப்பந்தத்தின் வார்த்தைகளாகிய பத்துக் கட்டளைகளை எழுதினார்.+

29 பின்பு, மோசே சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தார். அந்தச் சாட்சிப் பலகைகள் இரண்டையும் கையில் வைத்திருந்தார்.+ அவர் அதுவரை கடவுளோடு பேசிக்கொண்டிருந்ததால், மலையிலிருந்து இறங்கி வந்தபோது அவருடைய முகம் ஒளிவீசியது. ஆனால், அது அவருக்குத் தெரியவில்லை. 30 அவர் முகம் ஒளிவீசியதை ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் பார்த்தார்கள். அதனால், அவருக்குப் பக்கத்தில் போகவே பயந்தார்கள்.+

31 ஆனால், மோசே அவர்களைக் கூப்பிட்டார். அப்போது, ஆரோனும் ஜனங்களின் தலைவர்கள் எல்லாரும் அவரிடம் வந்தார்கள். மோசே அவர்களுடன் பேசினார். 32 அதன்பின், இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவருக்குப் பக்கத்தில் வந்தார்கள். சீனாய் மலையில் யெகோவா கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும் அவர் அவர்களுக்குச் சொன்னார்.+ 33 மோசே அவர்களோடு பேசி முடிக்கும்போது முகத்திரையைப் போட்டுக்கொள்வார்.+ 34 ஆனால், யெகோவாவிடம் பேசுவதற்காகப் போகும்போது அதை எடுத்துவிடுவார்.+ அதன்பின், அவர் வெளியே வந்து கடவுள் தந்த கட்டளைகளை இஸ்ரவேலர்களுக்குச் சொல்வார்.+ 35 இஸ்ரவேலர்கள் பார்க்கும்போது மோசேயின் முகம் ஒளிவீசும். மோசே முகத்திரையைப் போட்டுக்கொள்வார், கடவுளிடம் பேசுவதற்குப் போகும்போது மட்டும் அதை எடுத்துவிடுவார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்