உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 8
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எசேக்கியேல் முக்கியக் குறிப்புகள்

      • எசேக்கியேல் ஒரு தரிசனத்தில் எருசலேமுக்குக் கொண்டுபோகப்படுகிறார் (1-4)

      • ஆலயத்தில் அருவருப்பான காரியங்களைப் பார்க்கிறார் (5-18)

        • பெண்கள் தம்மூஸ் தெய்வத்துக்காக அழுதுகொண்டிருக்கிறார்கள் (14)

        • ஆண்கள் சூரியனைக் கும்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் (16)

எசேக்கியேல் 8:1

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “எசேக்கியேல் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்டுப் போன ஆறாவது வருஷம்.”

  • *

    வே.வா., “மூப்பர்கள்.”

  • *

    நே.மொ., “யெகோவாவின் கை என்னைப் பற்றிக்கொண்டது.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    2/2018, பக். 3

    “வேதாகமம் முழுவதும்”, பக். 134

    காவற்கோபுரம்,

    11/1/1988, பக். 13

எசேக்கியேல் 8:2

இணைவசனங்கள்

  • +தானி 7:9
  • +எசே 1:4, 27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/1/1988, பக். 13

எசேக்கியேல் 8:3

இணைவசனங்கள்

  • +எரே 20:2; எசே 9:2
  • +உபா 32:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/1/1988, பக். 13

எசேக்கியேல் 8:4

இணைவசனங்கள்

  • +யாத் 40:34
  • +எசே 1:27, 28

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/1/1988, பக். 13

எசேக்கியேல் 8:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 53-54, 56

    காவற்கோபுரம்,

    4/15/1993, பக். 27

    11/1/1988, பக். 13

எசேக்கியேல் 8:6

இணைவசனங்கள்

  • +2நா 36:14
  • +எரே 26:4, 6

எசேக்கியேல் 8:10

அடிக்குறிப்புகள்

  • *

    இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.

இணைவசனங்கள்

  • +லேவி 11:10
  • +யாத் 20:4, 5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/15/1993, பக். 27

    9/1/1986, பக். 19

எசேக்கியேல் 8:11

இணைவசனங்கள்

  • +2ரா 22:3, 4; 25:22; எரே 26:24
  • +எசே 16:17, 18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 54-58

    காவற்கோபுரம்,

    4/15/1993, பக். 27

    9/1/1986, பக். 19

எசேக்கியேல் 8:12

இணைவசனங்கள்

  • +ஏசா 29:15; எசே 9:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 134

    காவற்கோபுரம்,

    9/1/1986, பக். 20

எசேக்கியேல் 8:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 57-58

    காவற்கோபுரம்,

    4/15/1993, பக். 28

    11/1/1988, பக். 13-14

    நியாயங்காட்டி, பக். 92

எசேக்கியேல் 8:15

இணைவசனங்கள்

  • +2நா 36:14

எசேக்கியேல் 8:16

இணைவசனங்கள்

  • +2நா 4:9
  • +உபா 4:19; 2ரா 17:16; எரே 8:1, 2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 57, 58-59

    காவற்கோபுரம்,

    4/15/1993, பக். 28

எசேக்கியேல் 8:17

அடிக்குறிப்புகள்

  • *

    அநேகமாக, “உருவ வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு கிளையை.”

இணைவசனங்கள்

  • +2ரா 21:16; எரே 19:4; எசே 9:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    4/15/1993, பக். 28

    11/1/1988, பக். 13-14

எசேக்கியேல் 8:18

இணைவசனங்கள்

  • +எசே 5:11; 7:9
  • +ஏசா 1:15; மீ 3:4

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எசே. 8:2தானி 7:9
எசே. 8:2எசே 1:4, 27
எசே. 8:3எரே 20:2; எசே 9:2
எசே. 8:3உபா 32:16
எசே. 8:4யாத் 40:34
எசே. 8:4எசே 1:27, 28
எசே. 8:62நா 36:14
எசே. 8:6எரே 26:4, 6
எசே. 8:10லேவி 11:10
எசே. 8:10யாத் 20:4, 5
எசே. 8:112ரா 22:3, 4; 25:22; எரே 26:24
எசே. 8:11எசே 16:17, 18
எசே. 8:12ஏசா 29:15; எசே 9:9
எசே. 8:152நா 36:14
எசே. 8:162நா 4:9
எசே. 8:16உபா 4:19; 2ரா 17:16; எரே 8:1, 2
எசே. 8:172ரா 21:16; எரே 19:4; எசே 9:9
எசே. 8:18எசே 5:11; 7:9
எசே. 8:18ஏசா 1:15; மீ 3:4
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எசேக்கியேல் 8:1-18

எசேக்கியேல்

8 ஆறாம் வருஷம்,* ஆறாம் மாதம், ஐந்தாம் நாள் நான் என்னுடைய வீட்டில் உட்கார்ந்திருந்தேன். யூதாவின் பெரியோர்கள்* என்முன் வந்து உட்கார்ந்திருந்தார்கள். அப்போது, உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சக்தியால் நான் நிரப்பப்பட்டேன்.* 2 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, நெருப்புபோல் ஒருவர் தெரிந்தார். அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகத்துக்குக் கீழாக நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.+ அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகத்துக்கு மேலாக, வெள்ளியும் தங்கமும் கலந்த உலோகத்தைப் போலப் பிரகாசமாக இருந்தது.+ 3 கைபோல் தெரிந்த ஒன்றை அவர் நீட்டி, என்னுடைய தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினார். கடவுள் காட்டிய தரிசனத்தில் ஒரு சக்தி என்னை வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தூக்கிக்கொண்டு போய், எருசலேம் ஆலயத்தில் வடதிசைக்கு எதிராக இருந்த உள்வாசலில் விட்டது.+ அங்கே கடவுளுக்கு எரிச்சல் மூட்டுகிற சிலை வைக்கப்பட்டிருந்தது.+ 4 இஸ்ரவேலின் கடவுளுடைய மகிமை அங்கே தெரிந்தது.+ நான் சமவெளியில் பார்த்த மகிமையைப் போலவே அது இருந்தது.+

5 அப்போது அவர் என்னிடம், “மனிதகுமாரனே, தயவுசெய்து வடக்கே பார்” என்று சொன்னார். நானும் வடக்கே பார்த்தேன். கடவுளுக்கு எரிச்சல் மூட்டுகிற அந்தச் சிலை பலிபீடத்தின் வடக்கிலுள்ள நுழைவாசலில் இருந்தது. 6 அப்போது அவர், “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்கள் எப்படிப்பட்ட மோசமான காரியங்களை அங்கே செய்கிறார்கள் என்று பார்த்தாயா?+ நான் என்னுடைய ஆலயத்தைவிட்டுத் தூரமாகப் போகுமளவுக்கு அருவருப்பான காரியங்களை அவர்கள் செய்கிறார்கள்.+ ஆனால், இதைவிட அருவருப்பான காரியங்களை நீ பார்க்கப்போகிறாய்” என்று சொன்னார்.

7 பின்பு, ஆலயப் பிரகார வாசலுக்கு என்னைக் கொண்டுபோனார். அங்கே இருந்த சுவரில் நான் ஒரு ஓட்டையைப் பார்த்தேன். 8 அப்போது அவர், “மனிதகுமாரனே, தயவுசெய்து அந்த ஓட்டையைப் பெரிதாக்கு” என்றார். நான் அதைப் பெரிதாக்கியபோது, ஒரு நுழைவாசல் தெரிந்தது. 9 அவர் என்னிடம், “உள்ளே போய், அவர்கள் செய்கிற அக்கிரமங்களையும் அருவருப்பான காரியங்களையும் பார்” என்று சொன்னார். 10 நானும் உள்ளே போய்ப் பார்த்தேன். ஊரும் பிராணிகளின் உருவங்களும், அருவருப்பான மிருகங்களின்+ உருவங்களும், இஸ்ரவேல் ஜனங்களுடைய எல்லா அருவருப்பான* சிலைகளும்+ சுவரெங்கும் செதுக்கப்பட்டிருந்தன. 11 இஸ்ரவேல் ஜனங்களின் பெரியோர்களில் 70 பேர் அவற்றுக்குமுன் நின்றுகொண்டிருந்தார்கள். சாப்பானின்+ மகனான யசினியாவும் அங்கு இருந்தான். ஒவ்வொருவரும் ஒரு தூபக்கரண்டியைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். தூபத்தின் புகை மேலே எழும்பிக்கொண்டிருந்தது.+ 12 அப்போது அவர், “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்களின் பெரியோர்கள் ஒவ்வொருவரும் சிலைகளை வைத்திருக்கிற இருட்டான உள்ளறைகளில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தாயா? ‘யெகோவா நம்மைப் பார்ப்பதில்லை. யெகோவா இந்தத் தேசத்தைக் கைவிட்டுவிட்டார்’+ என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார்.

13 பின்பு என்னிடம், “அவர்கள் இதைவிட மிகவும் அருவருப்பான காரியங்கள் செய்வதை நீ பார்க்கப்போகிறாய்” என்று சொன்னார். 14 யெகோவாவுடைய ஆலயத்தின் வடக்கு நுழைவாசலுக்கு அவர் என்னைக் கொண்டுபோனார். அங்கே பெண்கள் உட்கார்ந்து தம்மூஸ் தெய்வத்துக்காக அழுதுகொண்டிருந்தார்கள்.

15 அப்போது அவர், “மனிதகுமாரனே, இதைப் பார்த்தாயா? ஆனால், இதைவிட அதிக அருவருப்பான காரியங்களை நீ பார்க்கப்போகிறாய்”+ என்றார். 16 பின்பு, யெகோவாவுடைய ஆலயத்தின் உட்பிரகாரத்துக்கு என்னைக் கொண்டுபோனார்.+ யெகோவாவுடைய ஆலய வாசலிலே, நுழைவு மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட 25 ஆண்கள் இருந்தார்கள். யெகோவாவுடைய ஆலயத்தின் பக்கம் முதுகைத் திருப்பிக்கொண்டு, கிழக்கே பார்த்து சூரியனைக் கும்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.+

17 அப்போது அவர், “மனிதகுமாரனே, இதைப் பார்த்தாயா? யூதா ஜனங்கள் இந்த அருவருப்பான காரியங்களைச் செய்து, தேசத்தை வன்முறையால் நிரப்பி,+ என் கோபத்தைக் கிளறுவது சின்ன விஷயமா? இதோ, என் மூக்குக்கு நேராகவே கிளையை* நீட்டுகிறார்கள். 18 அதனால், நான் கோபத்தில் கொதித்தெழுவேன். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட மாட்டேன். அவர்கள்மேல் கரிசனை காட்ட மாட்டேன்.+ அவர்கள் எவ்வளவுதான் சத்தமாக அழுதாலும் நான் கேட்க மாட்டேன்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்