28 என் எஜமானே, ராஜாவே, நீங்கள் நினைத்திருந்தால் என்னுடைய அப்பாவின் வம்சத்தையே அடியோடு அழித்திருக்கலாம். இருந்தாலும், உங்களுடைய மேஜையில் உங்களோடு சாப்பிடும் பாக்கியத்தை அடியேனுக்குத் தந்தீர்கள்.+ ராஜாவாகிய உங்களிடம் இதற்குமேல் எதையாவது மன்றாடிக் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று சொன்னார்.