-
லூக்கா 6:47-49பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
47 என்னிடம் வந்து என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செய்கிறவன் யாரைப் போல் இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்கிறேன்:+ 48 ஆழமாகத் தோண்டி, பாறைமேல் அஸ்திவாரம் போட்டு வீடு கட்டிய மனுஷனைப் போல் அவன் இருக்கிறான். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியபோதும், அதை அசைக்க முடியவில்லை. ஏனென்றால், அது உறுதியாகக் கட்டப்பட்டிருந்தது.+ 49 ஆனால், நான் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டும் அவற்றின்படி செய்யாதவன்+ அஸ்திவாரம் போடாமல் மண்மேல் வீடு கட்டிய மனுஷனைப் போல் இருக்கிறான். வெள்ளம் பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்து அடியோடு நாசமானது” என்றார்.
-