31 பின்பு, யோர்தான் ஆறுவரை ராஜா கூடவே போவதற்காக, ரோகிலிமைச் சேர்ந்த கீலேயாத்தியரான பர்சிலா+ யோர்தானுக்கு வந்தார். 32 பர்சிலா வயது முதிர்ந்தவர்; அவருக்கு 80 வயது. அவர் பெரிய பணக்காரராக இருந்ததால், மக்னாயீமில் ராஜா தங்கியிருந்த சமயத்தில் அவருக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுத்திருந்தார்.+