உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 21:19-24
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 19 நீ அவனைப் பார்த்து, ‘ஒருவனைக் கொன்றதும் இல்லாமல்+ அவன் சொத்தையும் எடுத்துக்கொண்டாயா?’+ என்று யெகோவா கேட்கிறார் என்று சொல். ‘நாபோத்தின் இரத்தத்தை நாய்கள் நக்கிய அதே இடத்தில் உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும்’+ என்று யெகோவா சொல்கிறார் என்றும் சொல்” என்றார்.

      20 ஆகாப் எலியாவைப் பார்த்து, “எதிரியே,+ என்னைக் கண்டுபிடித்து இங்கேயும் வந்துவிட்டாயா?” என்று கேட்டார். அதற்கு எலியா, “ஆமாம், கண்டுபிடித்துவிட்டேன். கடவுள் சொல்வது என்னவென்றால், ‘யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தே தீருவேன் என்று உறுதியாக இருக்கிறாயே.+ 21 அதனால் உனக்கு முடிவுகட்டுவேன், உன் வம்சத்தை அடியோடு அழிப்பேன்; ஆகாபின் வீட்டிலிருக்கிற எல்லா ஆண்களையும்,* ஆதரவற்றவர்களையும் அற்பமானவர்களையும்கூட, ஒழித்துக்கட்டுவேன்.+ 22 நீ என் கோபத்தைக் கிளறிவிட்டாய், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிவிட்டாய். அதனால், நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வம்சத்துக்கும்+ அகியாவின் மகன் பாஷாவின் வம்சத்துக்கும்+ ஏற்பட்ட அதே கதிதான் உன் வம்சத்துக்கும் ஏற்படும். 23 யெஸ்ரயேலில் உள்ள நிலத்தில் யேசபேலின் உடலை நாய்கள் தின்னும்+ என்றும் யெகோவா சொல்கிறார். 24 அதோடு, ஆகாபின் வீட்டாரில் எவனாவது நகரத்துக்குள்ளே செத்துப்போனால் அவனை நாய்கள் தின்னும்; அவர்களில் எவனாவது நகரத்துக்கு வெளியே செத்துப்போனால் அவனை வானத்துப் பறவைகள் தின்னும்.+

  • 2 ராஜாக்கள் 9:7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 7 உன்னுடைய எஜமான் ஆகாபுடைய வீட்டாரை நீ கொன்றுபோட வேண்டும். யேசபேல் கொன்றுபோட்ட என்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்துக்காகவும் என்னுடைய மற்ற ஊழியர்கள் எல்லாருடைய இரத்தத்துக்காகவும் யெகோவாவாகிய நான் பழிவாங்குவேன்.+

  • 2 ராஜாக்கள் 9:36
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 36 அவர்கள் திரும்பி வந்து யெகூவிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அதற்கு அவர், “திஸ்பியனான எலியா மூலம் யெகோவா சொன்னது நடந்துவிட்டது.+ ‘யெஸ்ரயேலில் உள்ள நிலத்தில் யேசபேலின் உடலை நாய்கள் தின்னும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்