-
2 நாளாகமம் 28:1-4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 ஆகாஸ்+ ராஜாவானபோது அவருக்கு 20 வயது. அவர் எருசலேமில் 16 வருஷங்கள் ஆட்சி செய்தார். தன்னுடைய மூதாதையான தாவீது யெகோவாவுக்குப் பிரியமாக நடந்ததுபோல் அவர் நடக்கவில்லை.+ 2 அதற்குப் பதிலாக, இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்தார்;+ பாகால்களுக்கு உலோகச் சிலைகளைச் செய்யும் அளவுக்குப் போய்விட்டார்.+ 3 அதோடு, பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்* பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார், தன்னுடைய மகன்களை நெருப்பில் சுட்டெரித்தார்.+ இப்படி, இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்.+ 4 அதுமட்டுமல்ல, ஆராதனை மேடுகளிலும்+ குன்றுகளிலும் அடர்த்தியான மரங்கள்+ ஒவ்வொன்றின் கீழும் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்தார்.
-