உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 16:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 நீங்கள் என்னைக் கல்லறையில்* விட்டுவிட மாட்டீர்கள்.+

      உங்களுக்கு உண்மையாக* இருப்பவர் சவக்குழியைக் காண* விட மாட்டீர்கள்.+

  • ஏசாயா 53:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 அவர் தன்னுடைய உயிரையே கொடுப்பார்.+

      குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்படுவார்.+

      பலருடைய பாவங்களைச் சுமப்பார்.+

      குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுவார்.+

      அதனால், பலரோடுகூட அவருக்கும் நான் ஒரு பங்கைக் கொடுப்பேன்.

      கைப்பற்றப்பட்டதை அவர் மற்ற வீரர்களோடு பங்குபோடுவார்.

  • மத்தேயு 17:22, 23
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 அவர்கள் கலிலேயாவில் கூடியிருந்தபோது இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்பட்டு, மக்களுடைய கையில் ஒப்படைக்கப்படுவார்.+ 23 அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள், ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார். அதைக் கேட்டு அவர்கள் மிகவும் துக்கப்பட்டார்கள்.

  • மத்தேயு 20:18, 19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 “நாம் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்; மனிதகுமாரன் முதன்மை குருமார்களிடமும் வேத அறிஞர்களிடமும் ஒப்படைக்கப்படுவார், அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து,+ 19 மற்ற தேசத்தாரிடம் அவரை ஒப்படைத்துவிடுவார்கள்; அவர்கள் அவரைக் கேலி செய்து, முள்சாட்டையால் அடித்து, மரக் கம்பத்தில் அறைந்து கொலை செய்வார்கள்.+ ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார்.

  • மாற்கு 8:31
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 31 அதோடு, மனிதகுமாரன் பல பாடுகள் பட வேண்டும், பெரியோர்களாலும்* முதன்மை குருமார்களாலும் வேத அறிஞர்களாலும் ஒதுக்கித்தள்ளப்பட்டு, கொலை செய்யப்பட வேண்டும்,+ மூன்று நாட்களுக்குப் பின்பு உயிரோடு எழுப்பப்பட வேண்டும்+ என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.

  • லூக்கா 9:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 அதோடு, “மனிதகுமாரன் பல பாடுகள் பட வேண்டும், பெரியோர்களாலும்* முதன்மை குருமார்களாலும் வேத அறிஞர்களாலும் ஒதுக்கித்தள்ளப்பட்டு, கொலை செய்யப்பட வேண்டும்,+ பின்பு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும்”+ என்றும் சொன்னார்.

  • லூக்கா 17:25
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 25 இருந்தாலும், முதலில் அவர் பல பாடுகள் பட்டு, இந்தத் தலைமுறையினரால் ஒதுக்கித்தள்ளப்பட வேண்டும்.+

  • லூக்கா 24:6-8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 6 அவர் இங்கே இல்லை, அவர் உயிரோடு எழுப்பப்பட்டுவிட்டார். அவர் கலிலேயாவில் இருந்தபோது சொன்ன விஷயங்களை ஞாபகப்படுத்திப் பாருங்கள். 7 மனிதகுமாரன் பாவிகளிடம் ஒப்படைக்கப்படவும், மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்படவும், அதன் பின்பு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்படவும் வேண்டுமென்று அவர் சொன்னாரே” என்றார்கள்.+ 8 அப்போது, அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் அவர்களுடைய ஞாபகத்துக்கு வந்தன.+

  • லூக்கா 24:46
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 46 பின்பு அவர்களிடம், “கிறிஸ்து பாடுகள் பட்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பார்+ என்றும்,

  • 1 கொரிந்தியர் 15:3, 4
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 3 நான் பெற்றுக்கொண்டதும் உங்களிடம் ஒப்படைத்ததுமாகிய மிக முக்கியமான செய்தி இதுதான்: வேதவசனங்களில் எழுதப்பட்டிருக்கிறபடி, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்தார்.+ 4 பின்பு அடக்கம் செய்யப்பட்டார்;+ ஆம், வேதவசனங்களில் எழுதப்பட்டிருக்கிறபடி,+ மூன்றாம் நாளில்+ உயிரோடு எழுப்பப்பட்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்