24 தன்னுடைய முயற்சி பலன் தரவில்லை என்பதையும் கலவரம்தான் வெடிக்கப்போகிறது என்பதையும் பிலாத்து புரிந்துகொண்டு, தண்ணீரை எடுத்து, “இந்த மனுஷனுடைய சாவுக்கு நான் பொறுப்பாளி கிடையாது. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி, கூட்டத்தார்முன் தன் கைகளைக் கழுவினார்.