5 கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த இதே மனப்பான்மை உங்களுக்கும் இருக்கட்டும்.+ 6 அவர் கடவுளுடைய சாயலில் இருந்தபோதிலும்,+ கடவுளுக்குச் சமமாக ஆக வேண்டுமென்று யோசித்துக்கூடப் பார்த்ததில்லை.+ 7 அதற்குப் பதிலாக, தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓர் அடிமையைப் போல் ஆனார்,+ ஒரு மனிதராக ஆனார்.+