11 உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள். ஆனால், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும் கடவுளுடைய சக்தியாலும் சுத்தமாகக் கழுவப்பட்டீர்கள்,+ பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்,+ நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டீர்கள்.+
25 கணவர்களே, சபைக்காகக் கிறிஸ்து தன்னையே கொடுத்து அதன்மீது அன்பு காட்டியதுபோல்+ நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள்.+26 கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரால்* சபையைச் சுத்தப்படுத்திப் புனிதமாக்குவதற்காக அவர் அப்படிச் செய்தார்.+
5 மறுவாழ்வு பெறுவதற்கு நம்மைத் தூய்மையாக்கியதன்* மூலமும்+ தன்னுடைய சக்தியால் புதுப்பித்ததன் மூலமும் நம்மை மீட்டார்;+ நம்முடைய நீதியான செயல்களால் அல்ல,+ தன்னுடைய இரக்கத்தால் நம்மை மீட்டார்.+
22 கெட்ட மனசாட்சியிலிருந்து சுத்தமாக்கப்பட்ட*+ இதயமும், சுத்தமான தண்ணீரால் கழுவப்பட்ட உடலும்+ உள்ளவர்களாக, உண்மை இதயத்தோடும் முழு விசுவாசத்தோடும் அவரை அணுக வேண்டும்.