-
யோவான் 12:4-6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 ஆனால், அவருடைய சீஷர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாஸ் இஸ்காரியோத்து,+ 5 “இந்த வாசனை எண்ணெயை 300 தினாரியுவுக்கு* விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான். 6 ஏழைகள் மீதுள்ள அக்கறையால் அல்ல, அவன் திருடனாக இருந்ததால்தான் அப்படிச் சொன்னான். பணப்பெட்டி அவனிடம் இருந்ததால், அதில் போடப்பட்ட பணத்தைத் திருடுவது அவனுடைய வழக்கமாக இருந்தது.
-