உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தானியேல் 9:26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 அந்த 62 வாரங்களுக்குப் பின்பு, மேசியா தனக்கென்று எதுவும் இல்லாமல் கொல்லப்படுவார்.+

      ஒரு படைத் தலைவரும் அவருடைய வீரர்களும் வந்து நகரத்தையும் பரிசுத்த இடத்தையும் அழிப்பார்கள்.+ வெள்ளத்தால் அதற்கு முடிவு வரும், அந்த முடிவு வரும்வரை போர் நடக்கும். நாசம் செய்ய கடவுள் தீர்மானித்திருக்கிறார்.+

  • மத்தேயு 27:26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 பின்பு, அவர்களுக்காக பரபாசை விடுதலை செய்தார்; இயேசுவையோ சாட்டையால் அடித்து,+ மரக் கம்பத்தில் அறைந்து கொல்லும்படி படைவீரர்களுக்குக் கட்டளையிட்டார்.+

  • மத்தேயு 27:31
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 31 அவரைக் கேலி செய்த பின்பு, கடைசியாக அந்தச் சால்வையை எடுத்துவிட்டு அவருடைய மேலங்கியை அவருக்குப் போட்டுவிட்டார்கள்; பின்பு, அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிப்பதற்காகக் கொண்டுபோனார்கள்.+

  • மாற்கு 15:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 பிலாத்து அந்தக் கூட்டத்தாரைத் திருப்திப்படுத்துவதற்காக பரபாசை விடுதலை செய்தார்; இயேசுவையோ சாட்டையால் அடித்து,+ மரக் கம்பத்தில்* அறைந்து கொல்லும்படி படைவீரர்களிடம் கட்டளையிட்டார்.+

  • லூக்கா 23:24, 25
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 24 அதனால், அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு வழங்கினார். 25 அவர்கள் வற்புறுத்திக் கேட்டதால், தேசத் துரோகமும் கொலையும் செய்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டவனை விடுதலை செய்தார். ஆனால், இயேசுவை அவர்களுடைய விருப்பப்படி செய்ய விட்டுவிட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்