உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பக். 94-95
  • பகுதி 7​—⁠முன்னுரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பகுதி 7​—⁠முன்னுரை
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • தாவீதும் சவுலும்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • தாவீது ஏன் ஓடிப்போக வேண்டும்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • 1 சாமுவேல் முக்கியக் குறிப்புகள்
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • 1 சாமுவேல் முக்கியக் குறிப்புகள்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பக். 94-95
கரடியிடமிருந்து ஆடுகளை தாவீது காப்பாற்றுகிறார்

பகுதி 7​—⁠முன்னுரை

சுமார் 80 வருஷ காலப் பகுதியில், சவுல் மற்றும் தாவீதின் வாழ்க்கையில் நடந்தவற்றை இந்தப் பகுதியில் படிப்போம். சவுல் ஆரம்பத்தில் மனத்தாழ்மையாக இருந்தார், கடவுளுக்குப் பயந்து நடந்தார். ஆனால் சீக்கிரத்தில் மாறிவிட்டார், யெகோவா பேச்சைக் கேட்காமல் போய்விட்டார். யெகோவா அவரை ஒதுக்கிவிட்டு, இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக தாவீதை அபிஷேகம் செய்யும்படி சாமுவேலிடம் சொன்னார். பொறாமை பிடித்த சவுல், தாவீதைக் கொல்ல பல தடவை முயற்சி செய்தார். ஆனால், தாவீது அவரைப் பழிவாங்கவே இல்லை. தாவீதை யெகோவாதான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை சவுலின் மகனான யோனத்தான் புரிந்துகொண்டார். அதனால், அவர் தாவீதுக்கு உண்மையாக இருந்தார். தாவீது சில மோசமான பாவங்களைச் செய்தார். ஆனால், யெகோவா கண்டித்தபோது அதை ஏற்றுக்கொண்டார். யெகோவாவுக்கும் நம்மை வழிநடத்துகிறவர்களுக்கும் எப்போதும் கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள்.

முக்கியப் பாடங்கள்

  • யெகோவாமீது வைத்திருக்கும் அன்பினால் நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அதுதான் நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம்

  • பழிவாங்கக் கூடாது, அதற்குப் பதிலாக அநியாயத்தை யெகோவா சரிசெய்கிற வரைக்கும் நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்

  • நாம் ஏதாவது ஒரு மோசமான பாவத்தைச் செய்தால், அதை மறைக்கக் கூடாது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்