பாடங்களிலிருந்து பயன் பெற...
இங்கு இருக்கும் குறிப்புகளைப் படித்துவிட்டு, பிறகு வீடியோவைப் பாருங்கள்.
முதல் பகுதி
ஒவ்வொரு பாராவையும் படியுங்கள். முக்கியக் குறிப்புகளை வலியுறுத்துவதற்காகத் தடித்த எழுத்துக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளையும் (A) வசனங்களையும் (B) சேர்த்துப் படியுங்கள். “வாசியுங்கள்” என்று சில வசனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதையும் கவனியுங்கள்.
இரண்டாவது பகுதி
ஆராய்ந்து பார்க்கலாம்! பகுதியின் சுருக்கம் ஆரம்பத்தில் (C) கொடுக்கப்பட்டிருக்கிறது. கலந்துபேச வேண்டிய விஷயங்களைத் துணைத் தலைப்புகள் (D) சொல்கின்றன. உங்களுக்கு பைபிளைச் சொல்லித்தருபவரோடு சேர்ந்து வசனங்களை வாசியுங்கள், கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், வீடியோக்களை பாருங்கள்.
வீடியோ பகுதியில், படிக்கும் விஷயத்தோடு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் இருக்கும். சில வீடியோக்கள் நிஜ சம்பவங்களைக் காட்டுகின்றன. மற்றவை வெறும் நடிப்புகள்தான் என்றாலும், எதார்த்தமான சூழ்நிலைகளைச் சித்தரிக்கின்றன.
படங்களையும் பட விளக்கங்களையும் (E) கவனியுங்கள். சிலர் இப்படிச் சொல்கிறார்கள் (F) பகுதியைப் படித்துவிட்டு அதற்கு எப்படிப் பதில் சொல்வீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
கடைசிப் பகுதி
சுருக்கம், ஞாபகம் வருகிறதா? (G) பகுதிகளுடன் பாடம் முடியும். படித்து முடித்த தேதியை எழுதி வையுங்கள். நீங்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று குறிக்கோள் (H) பகுதி சொல்லும். அலசிப் பாருங்கள் (I) பகுதியில் நீங்கள் வாசிக்க அல்லது பார்க்கக் கூடுதலான தகவல் இருக்கும்.
பொருளடக்கம்
|
|
|
|
|
வசனங்களைக் கண்டுபிடிக்க...
பைபிளில் 66 சின்னச் சின்னப் புத்தகங்கள் இருக்கின்றன. அது எபிரெய-அரமேயிக் வேதாகமம் (“பழைய ஏற்பாடு”) என்றும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் (“புதிய ஏற்பாடு”) என்றும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
பைபிள் புத்தகமும் (A), அதிகாரமும் (B), வசனமும் அல்லது வசனங்களும் (C) பாடங்களில் கொடுக்கப்பட்டிருக்கும்.
உதாரணத்துக்கு, யோவான் 17:3 என்பது யோவான் புத்தகத்தில் 17-ஆம் அதிகாரத்தில் 3-ஆம் வசனத்தைக் குறிக்கிறது.