நீங்கள் பைபிளை நம்ப முடியுமா?
நீங்கள் ஒரு பைபிளை எடுத்து, ஒரு காசை காண்பதற்கு எதிர்பார்ப்பீர்களா? இந்தப் பழங்கால வெள்ளிக் காசைப்பற்றி என்ன?
பழங்காலக் கதைகளையும் போற்றுதற்குரிய ஒழுக்கப்பாடங்களையும் உடைய ஓர் ஆதிகாலப் புத்தகம் என்று பலர் பைபிளைப்பற்றி நினைக்கின்றனர். எனினும், பைபிள் பதிவுகள் துல்லியமான வரலாறு என அவர்கள் நம்புவதில்லை, எனவே அவர்கள் அது கடவுளுடைய வார்த்தையாக இருக்கிறது என்பதை ஏற்க மறுக்கின்றனர். ஆனாலும், பைபிளின் துல்லியத்தன்மைக்குப் போதுமான சான்று இருக்கிறது. இந்தக் காசு (பெரிதாக்கப்பட்ட படம்) ஒரு நல்ல உதாரணம். எழுத்துப்பதிவு என்ன சொல்கிறது?
தென்கிழக்குப் பகுதியிலுள்ள நகரமாகிய தர்சுவில், இன்றைய துருக்கியில் இந்தக் காசு செய்யப்பட்டது. பெர்சியாவின் ஆளும்பிரபு மாஸாவுஸ் ஆட்சிக்காலத்தில், பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில், இந்தக் காசு தயாரிக்கப்பட்டது. இது அவரை, “நதிக்கு அப்புறத்தில்,” அதாவது, ஐப்பிராத்து நதிக்கு அப்புறத்தில் மாகாணத்தின் தேசாதிபதி என்று குறிப்பிடுகிறது.
ஆனால் ஏன் அந்தச் சொற்றொடர் அக்கறையைத் தூண்டுவதாயிருக்கிறது? ஏனென்றால், இதே பதிவியின் பெயரை உங்களுடைய பைபிளில் நீங்கள் காண்பதுதான். எஸ்றா 5:6–6:13, பெர்சிய ராஜா தரியுவுக்கும் தேசாதிபதி தத்னாய் என்பவருக்கும் இடையே நடந்த கடிதத்தொடர்பைப்பற்றிப் பேசுகிறது. எருசலேமில் யூதர்கள் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதுதான் பிரச்னையில் இருந்தது. எஸ்றா, கடவுளுடைய சட்டத்தை நகல் எடுப்பதில் திறமைமிக்கவர், எனவே அவர் என்ன எழுதுகிறார் என்பதில் துல்லியமாகவும் சரியாகவும் இருக்கும்படி நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் எஸ்றா 5:6 மற்றும் 6:13-ல், (NW) அவர் தத்னாயை “நதிக்கு அப்புறத்தில் தேசாதிபதியாய் இருந்த” என்று குறிப்பிடுவதை நீங்கள் காண்பீர்கள்.
இந்தக் காசு பொறிக்கப்படுவதற்கு ஏறக்குறைய 100 வருடங்களுக்கு முன்பு, எஸ்றா அதைச் சுமார் பொ.ச.மு. 460-ல் எழுதினார். ஆ, பூர்வீக அதிகாரியின் பதவியின் பெயரெல்லாம் சின்னஞ்சிறு விவரப்பதிவு என்று சொல்கிறவர்களும் உண்டே. ஆனால் பைபிள் எழுத்தாளர்மீது நீங்கள் இப்படிப்பட்ட சின்னஞ்சிறு விவரத்திலும் நம்பிக்கை வைக்கலாமென்றால், அவர்கள் எழுதின மற்றக் காரியங்களின்மீது உங்களுடைய நம்பிக்கையை அது அதிகரிக்கவேண்டுமல்லவா?
இப்படிப்பட்ட நம்பிக்கைக்குக் கூடுதலான காரணங்களை இந்த இதழின் முதல் இரண்டு கட்டுரைகளில் நீங்கள் காணலாம்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
Collection of Israel Dept. of Antiquities Exhibited & photographed Israel Museum