தயவுசெய்து தவறாமல் போய் சந்தியுங்கள்
யாரைத் தவறாமல் போய் சந்திக்க வேண்டும்? பிரசுரத்தையோ தொடர்ந்து பத்திரிகையையோ பெற விரும்புகிறவர்களை அல்லது தங்களை சாட்சிகள் யாரேனும் வீட்டில் வந்து சந்திக்கும்படி கேட்டுக்கொள்பவர்களைப் போய் சந்திக்க வேண்டும். இப்படிப்பட்ட வேண்டுகோள்கள் எங்கிருந்து வருகின்றன? கடிதம், தொலைபேசி அல்லது நமது இன்டர்நெட் முகவரி மூலம் கிளை அலுவலகத்தை அணுகும் ஆட்களிடமிருந்து இவை வருகின்றன. இப்படி யாரேனும் ஆர்வம் காட்டுகையில், “தயவுசெய்து இந்த நபரைப் போய் சந்திக்க தகுதி வாய்ந்த பிரஸ்தாபியை ஏற்பாடு செய்யுங்கள்” என்ற தலைப்பிலுள்ள S-70 என்ற ஆங்கில படிவத்தை உள்ளூர் சபைக்கு கிளை அலுவலகம் அனுப்பி வைக்கும். ஒரு S-70 படிவத்தை மூப்பர்கள் பெற்றுக்கொண்டதும், ஆர்வம் காட்டுபவரைப் போய் சந்திக்க ஊக்கமாக முயலும் ஒரு பிரஸ்தாபியிடம் உடனடியாக அதை கொடுக்க வேண்டும். பிரஸ்தாபியால் அந்த நபரை வீட்டில் சந்திக்க முடியாவிட்டால் அவருடன் டெலிபோனில் தொடர்புகொள்ள அவர் முயலலாம் அல்லது ஒரு குறிப்பை எழுதி மற்றவர்கள் கண்ணில் படாதபடி அந்த வீட்டில் போட்டுவிட்டு வரலாம். இப்படி, ஆர்வம் காட்டுபவரைப் போய் சந்திக்கும்படி உங்களிடம் கேட்டுக் கொண்டால் தயவுசெய்து உடனடியாக தவறாமல் போய் சந்தியுங்கள்.