தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
பிப்ரவரி 27, 2006-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜனவரி 2 முதல் பிப்ரவரி 27, 2006 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை . . . எப்போதும் தேவனுக்குச் செலுத்த” தேவராஜ்ய ஊழியப் பள்ளி எவ்விதங்களில் நமக்கு உதவுகிறது? (எபி. 13:15) [be-TL பக். 5 பாரா 3–பக். 6 பாரா 1]
2. திருத்தமாக வாசிப்பதற்கு நாம் ஏன் ஊக்கத்துடன் முயற்சி எடுக்க வேண்டும்? [be-TL பக். 83 பாரா 1–பக். 84 பாரா 1]
3. பேசும்போதும் போதிக்கும்போதும் தெளிவாகப் பேசுவது ஏன் முக்கியம்? [be-TL பக். 86 பாரா. 1-6]
4. சரியாக உச்சரிப்பது ஏன் முக்கியம், கவனத்தில் வைக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் யாவை? [be-TL பக். 89 பாரா 1–பக். 90 பாரா 2, பெட்டி]
5. தங்குதடையின்றி வெகு சரளமாக உரையாட உதவும் சில ஆலோசனைகள் யாவை? [be-TL பக். 94 பாரா. 4-5, பெட்டி]
பேச்சு நியமிப்பு எண் 1
6. பைபிள் தீர்க்கதரிசனத்தின் நம்பகத்தன்மையை 2 நாளாகமம் 36:17-23-ல் உள்ள வசனங்கள் எப்படி உறுதிப்படுத்துகின்றன? [si-TL பக். 84 பாரா 35]
7. யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காக பொ.ச.மு. 537-ல் யூதர்கள் தங்களுடைய தாயகம் திரும்பி வருவதற்கு வழிநடத்திய தொடர் சம்பவங்கள் யாவை? [si-TL பக். 85 பாரா. 1-3]
8. எஸ்றா புத்தகம் யெகோவாவை மெய்க் கடவுளென எப்படி நிரூபிக்கிறது, அவர்மீது எப்படி நம்பிக்கையை வளர்க்கிறது? [si-TL பக். 87 பாரா. 14, 18]
9. பைபிளின் காலக்கணக்கில் “அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம்” ஏன் முக்கியமானது? (நெ. 2:1, 5, 6, 11, 17, 18) [si-TL பக். 88 பாரா. 2, 5]
10. இன்றுள்ள கடவுளுடைய ஊழியர்களுக்கு நெகேமியா எப்படிச் சிறந்த மாதிரியாகத் திகழ்கிறார்? [si-TL பக். 90 பாரா. 16-17]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. யெகோவாவுடைய பதிலைத் தெரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஊரீம், தும்மீம் என்பவை சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்களிடம் இருந்தனவா? (எஸ்றா 2:61-63)
12. பாபிலோனில் இருந்த யூதர்கள் பலர் எஸ்றாவுடன் எருசலேமுக்குத் திரும்பிச் செல்ல ஏன் தயங்கினர்? (எஸ்றா 7:28–8:20)
13. ஒரேவொரு கையை மட்டும் பயன்படுத்தி எப்படி மதிற்சுவரைத் திரும்பக் கட்டும் வேலை நடந்திருக்கும்? (நெ. 4:17, 18)
14. இரகசிய கடிதங்கள் பொதுவாக முத்திரை போடப்பட்ட உறைக்குள் வைத்து அனுப்பப்பட்டன; அப்படியிருக்க சன்பல்லாத்து ஏன் முத்திரை போடாமல் கடிதத்தை நெகேமியாவுக்கு அனுப்பினான்? (நெ. 6:5)
15. பிரபுக்களையும் உயர்குடியினரையும் முன்னொரு சமயம் நெகேமியா கடிந்துகொண்டது போல தாயகம் திரும்ப முன்வராத யூதர்களைக் ‘கடிந்துகொண்டது’ தவிர, வேறு என்னவெல்லாம் செய்தார்? (நெ. 13:25, 28)