தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
அக்டோபர் 26, 2009-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும்.
1. பாலாக்கின் மனிதரோடு போகும்படி பிலேயாமிடம் யெகோவாவே சொன்னதால், பிலேயாம் அவர்களோடு போனபோது யெகோவா ஏன் கோபப்பட்டார்? (எண். 22:20-22) [w04 8/1 பக். 27 பாரா 2]
2. பினெகாஸ் யெகோவாவிடம் ‘பக்திவைராக்கியம் காட்டியது,’ நாம் கடவுளுக்குச் செய்திருக்கும் ஒப்புக்கொடுத்தலைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்க எவ்வாறு உதவுகிறது? (எண். 25:11) [w95 3/1 பக். 16 பாரா 13]
3. மோசேக்குப் பின் யோசுவா ஏன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்? (எண். 27:15-19) [w02 12/1 பக். 12 பாரா 1]
4. எண்ணாகமம் 31:27 இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு எவ்விதத்தில் உற்சாகமளிக்கிறது? [w05 3/15 பக். 24]
5. அடைக்கலப் பட்டணங்கள் இஸ்ரவேலர்களுக்கு என்னென்ன விதங்களில் நன்மை அளித்தன? (எண். 35:11, 12) [w95 11/15 பக். 14 பாரா 17]
6. விவேகம் ஏன் கிறிஸ்தவர்களுக்குத் தேவையான ஒரு முக்கிய குணம், அதன் விளைவுகள் என்ன? (உபா. 1:13) [w03 1/15 30; w00 10/1 பக். 32 பாரா. 1-3]
7. நியாயப்பிரமாணம் எவ்விதங்களில் கடவுளுடைய நீதியை வெளிக்காட்டியது? (உபா. 4:8) [w02 6/1 பக். 14 பாரா 8-பக். 15 பாரா. 9-10]
8. உபாகமம் 6:16-19 காட்டுகிறபடி, யெகோவாவைப் பரீட்சை பார்ப்பதற்கான சரியான வழியும் தவறான வழியும் என்ன? [w04 9/15 பக். 27 பாரா 1]
9. யெகோவாவின் வார்த்தைகள் இஸ்ரவேலர்களின் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்தன, அந்த வார்த்தைகள் இன்று நம்மை எப்படிப் போஷிக்கின்றன? (உபா. 8:3) [w99 8/15 பக். 25-26]
10. உபாகமம் 12:16, 24-ல் உள்ள வார்த்தைகள், நம்முடைய இரத்தத்தையே பயன்படுத்தும் சிகிச்சைமுறைகளைக் குறித்த நம் கருத்தை எப்படிப் பாதிக்கின்றன? [w00 10/15 பக். 30 பாரா 7]