ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .
அனுதாபம் காட்டுங்கள்
அனுதாபம் என்பது, மற்றவர்களுடைய எண்ணங்களை, உணர்ச்சிகளை, நம்பிக்கைகளை, தேவைகளை புரிந்துகொள்ளும் திறமையைக் குறிக்கிறது. நாம் அனுதாபம் காட்டுவதை மற்றவர்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆசை நம் மனதில் ஊற்றெடுப்பதைத்தான் அனுதாபம் என்று சொல்கிறோம். ஊழியத்தில் மக்களிடம் நாம் அனுதாபம் காட்டும்போது, யெகோவாவைப் போல அன்பாகவும் அக்கறையாகவும் நடந்துகொள்கிறோம். இப்படிச் செய்யும்போது, யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர்கள் ஆசைப்படுவார்கள்.—பிலி 2:4.
அனுதாபம் காட்டுவது, மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக நாம் பயன்படுத்துகிற ஒரு உத்தி கிடையாது, அவர்கள் சொல்வதை அன்பாகவும் கவனமாகவும் கேட்பதன் மூலம் நாம் அனுதாபம் காட்டுகிறோம். இது நம்முடைய பேச்சு, மனப்பான்மை, சைகை மற்றும் முகபாவனைகளில் தெரிய வேண்டும். ஒருவர்மேல் உண்மையான அக்கறை இருக்கும்போது, அவரிடம் அனுதாபம் காட்டுவோம். அவருடைய விருப்பங்கள், நம்பிக்கைகள், சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கவனிப்போம். அவருக்கு நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுப்பதோடு, நடைமுறையான உதவிகளையும் செய்வோம். மாற்றங்களைச் செய்யும்படி கட்டாயப்படுத்த மாட்டோம். நம்முடைய உதவியை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்போது ஊழியத்தில் நம்முடைய சந்தோஷம் அதிகமாகிறது.
சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—அனுதாபம் காட்டுவதில் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
ஜேட் லேட்டாக வந்தபோது நீட்டா எப்படி அனுதாபம் காட்டினாள்?
படிக்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதாக ஜேட் சொன்னபோது நீட்டா எப்படி அனுதாபம் காட்டினாள்?
நாம் அனுதாபம் காட்டும்போது யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்கள் ஆசைப்படுவார்கள்
வேலைகளை ஒழுங்குபடுத்தும் விஷயத்தில் நீட்டா எப்படி ஜேடுக்கு அனுதாபம் காட்டினாள்?