உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 ஜூலை பக். 5
  • “ஒருபோதும் கவலைப்படாதீர்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “ஒருபோதும் கவலைப்படாதீர்கள்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருள்கள்
    கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள்
  • விரைவில், எவருமே ஏழையாக இரார்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • வறுமையே இல்லாத உலகம் அருகில்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • ஏழைகளுக்கு நம்பிக்கை அளியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2007
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 ஜூலை பக். 5
ஏழை சமுதாயத்தில் வாழும் ஆறு பேரைக் கொண்ட ஒரு குடும்பம் தங்களுடைய சகோதரர்களோடு சேர்ந்து ஆன்மீக விஷயங்களில் கலந்துகொள்வதற்காக நடந்துபோகிறார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“ஒருபோதும் கவலைப்படாதீர்கள்”

பூர்வ கால இஸ்ரவேலில் இருந்த ஏழைகளுக்கு யெகோவா உதவி செய்தார். இன்று, பணக் கஷ்டத்தில் தவிக்கிற தன்னுடைய ஊழியர்களுக்கு அவர் எப்படியெல்லாம் உதவுகிறார்?

  • பணத்தைப் பற்றிய சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள அவர் கற்றுக்கொடுக்கிறார்.—லூ 12:15; 1தீ 6:6-8

  • சுயமரியாதையைக் காத்துக்கொள்ள உதவுகிறார்.—யோபு 34:19

  • கடினமாக உழைக்கவும் கெட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்க்கவும் கற்றுத்தருகிறார்.—நீதி 14:23; 20:1; 2கொ 7:1

  • அன்பான கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடைய குடும்பத்தின் பாகமாக ஆவதற்கு வாய்ப்பைத் தருகிறார்.—யோவா 13:35; 1யோ 3:17, 18

  • எதிர்கால நம்பிக்கையைக் கொடுக்கிறார்.—சங் 9:18; ஏசா 65:21-23

எந்தளவுக்குப் பணக் கஷ்டத்தில் தவித்தாலும் சரி, நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. (ஏசா 30:15) யெகோவாவுடைய அரசாங்கத்துக்கு நாம் எப்போதும் முதலிடம் கொடுத்தால், நம்முடைய அன்றாடத் தேவைகளை அவர் கவனித்துக்கொள்வார்.—மத் 6:31-33.

அன்பு ஒருபோதும் ஒழியாது . . . வறுமையில் வாடினாலும்—காங்கோ என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ‘அன்பு ஒருபோதும் ஒழியாது . . . வறுமையில் வாடினாலும்—காங்கோ’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. மாநாடு நடக்கும் இடத்துக்கு சகோதர சகோதரிகள் கூட்டமாக நடந்துபோகிறார்கள். நிறைய பேர் நாற்காலிகளையும் தங்களுக்குத் தேவையான மற்ற பொருள்களையும் எடுத்துக்கொண்டு போகிறார்கள்.

    மண்டல மாநாடு நடக்கும் இடத்துக்குப் பக்கத்தில் இருந்த சகோதரர்கள், தூரமான இடங்களிலிருந்து வந்த சகோதரர்களை எப்படி அன்பாகப் பார்த்துக்கொண்டார்கள்?

  • ‘அன்பு ஒருபோதும் ஒழியாது . . . வறுமையில் வாடினாலும்—காங்கோ’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. தூரமான இடங்களிலிருந்து வரும் சகோதரர்களுக்காக ஒரு சகோதரர் தன்னுடைய வீட்டில் படுக்கையைத் தயார் செய்கிறார்.

    வசதிவாய்ப்பு இல்லாதவர்கள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அன்பைப் பற்றி இந்த வீடியோவிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?

  • ‘அன்பு ஒருபோதும் ஒழியாது . . . வறுமையில் வாடினாலும்—காங்கோ’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. சகோதரர்கள் மாநாட்டுக்காக உடைகளைப் போட்டுக்கொள்கிறார்கள்..

    நம்மிடம் பொருள்வசதி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நாம் எப்படி யெகோவாவைப் போல நடந்துகொள்ளலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்