ஞாயிறு, டிசம்பர் 10
எஜமானே, இந்தச் சமயத்திலா இஸ்ரவேலுக்கு அரசாங்கத்தை மீட்டுத் தரப்போகிறீர்கள்?—அப். 1:6.
இயேசு பரலோகத்திற்குப் போவதற்கு கொஞ்சம் முன்பு சீடர்கள் அவரிடம் மேலே இருக்கும் விஷயத்தைக் கேட்டார்கள். இயேசு அவர்களிடம், கடவுளுடைய அரசாங்கம் எப்போது ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான சமயம் இன்னும் வரவில்லை என்று சொன்னார். அதுவரை ஒரு முக்கியமான வேலையில், அதாவது நற்செய்தியை சொல்லும் வேலையில், சுறுசுறுப்பாக ஈடுபடும்படி அவர்களிடம் சொன்னார். (அப். 1:7, 8) அதுமட்டுமல்ல, கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டும் என்றும் ஜெபிக்க சொன்னார்; அதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றும் சொன்னார். அதனால்தான், நாமும் கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டுமென்று ஜெபம் செய்கிறோம். இயேசு பரலோகத்தில் ஆட்சி செய்வதற்கான சமயம் நெருங்கியது. அப்போது, எந்த வருடத்தில் இயேசு ஆட்சி செய்ய ஆரம்பிப்பார் என்பதை யெகோவா தம்முடைய மக்களுக்குத் தெரியப்படுத்தினார். உதாரணத்திற்கு 1876-ல் சார்ல்ஸ் டேஸ் ரஸல், “புறதேசத்தாரின் காலங்கள்: அவை எப்போது முடிவடையும்?” என்ற கட்டுரையை எழுதினார். அதில், தானியேல் தீர்க்கதரிசி சொன்ன ‘ஏழு காலங்களும்’ இயேசு சொன்ன ‘புறதேசத்தாருக்குக் குறிக்கப்பட்ட காலங்களும்’ ஒன்றுதான் என்று சொன்னார். இந்தக் காலங்கள் 1914-ல் முடிவடையும் என்பதையும் ரஸல் அந்தக் கட்டுரையில் விளக்கியிருந்தார்.—தானி. 4:16; லூக். 21:24. w15 6/15 4:11, 12
டிசம்பர் 4-10
செப்பனியா 1–ஆகாய் 2
பாட்டு 151; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவுடைய கோபத்தின் நாள் வருவதற்கு முன்பே அவரைத் தேடுங்கள்”: (10 நிமி.)
[செப்பனியா புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
செப் 2:2, 3—யெகோவாவைத் தேடுங்கள், நீதிநெறிகளைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள் (w01 2/15 பக். 18-19 பாரா. 5-7)
[ஆகாய் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
செப் 1:8—இந்த வசனத்தில் என்ன எச்சரிப்பு இருக்கிறது? (w07 11/15 பக். 11 பாரா 3)
ஆகா 2:9—செருபாபேலுடைய ஆலயத்தின் மகிமை எந்தெந்த விதங்களில் சாலொமோனுடைய ஆலயத்தின் மகிமையைவிட அதிகமாக இருந்தது? (w07 12/1 பக். 9 பாரா 2)
செப்பனியா 1 முதல் ஆகாய் 2 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஆகா 2:1-14
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
இந்த மாதம் ஊழியத்தில் எப்படிப் பேசலாம்?: (15 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு வீடியோவையும் காட்டிய பிறகு அதிலிருக்கும் முக்கியக் குறிப்புகளைக் கலந்துபேசுங்கள். விழித்தெழு! எண் 6, 2017-ன் எலெக்ட்ரானிக் பிரதிகளை எல்லாருக்கும் விநியோகிக்கும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபை தேவைகள்: (5 நிமி.)
சுத்தமான பாஷை சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துகிறது (செப் 3:9): (10 நிமி.) ஆகஸ்ட் 15, 2012, காவற்கோபுரம், பக். 12, பாரா 4-ன் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இப்போது நெருங்கிய நண்பர்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள் (வீடியோக்கள் > பேட்டிகளும் அனுபவங்களும் என்ற தலைப்பில் பாருங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 11 பாரா. 1-9
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 50; ஜெபம்