13 அங்கே யூதாவின் ராஜாவான அகசியாவின்+ சகோதரர்களை யெகூ பார்த்தார். அவர்களிடம், “நீங்கள் யார்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாங்கள் அகசியாவின் அண்ணன் தம்பிகள். ராஜாவின் மகன்களும் ராஜமாதாவின் மகன்களும் நன்றாக இருக்கிறார்களா என்று விசாரிக்கப் போய்க்கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார்கள்.