உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 16:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அன்றுமுதல் இயேசு தன்னுடைய சீஷர்களிடம், தான் எருசலேமுக்குப் போய் பெரியோர்களாலும்* முதன்மை குருமார்களாலும் வேத அறிஞர்களாலும் பல பாடுகள் பட்டு, கொலை செய்யப்பட வேண்டும், பின்பு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும்+ என்பதை விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார்.

  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16:21

      இயேசு: சில பழங்கால கையெழுத்துப் பிரதிகளில் “இயேசு கிறிஸ்து” என்று கொடுக்கப்பட்டுள்ளது.

      பெரியோர்களாலும்: வே.வா., “மூப்பர்களாலும்.” பெரியோர்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தை பிரஸ்பிட்டிரோஸ். பைபிளில் பயன்படுத்தப்படும்போது, சமுதாயத்திலோ தேசத்திலோ அதிகாரமும் பொறுப்பும் உள்ள நபர்களை அது முக்கியமாகக் குறிக்கிறது. அது சிலசமயங்களில் வயதில் மூத்தவர்களைக் குறிக்கிறது (லூ 15:25; அப் 2:17), ஆனால் எப்போதுமே அல்ல. இந்த வசனத்தில் அது யூதத் தலைவர்களைக் குறிக்கிறது; அவர்கள் அடிக்கடி முதன்மை குருமார்களோடும் வேத அறிஞர்களோடும் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்தான் நியாயசங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தார்கள்.​—மத் 21:23; 26:3, 47, 57; 27:1, 41; 28:12; சொல் பட்டியலில் “மூப்பர்கள்; பெரியோர்கள்” என்ற தலைப்பைப் பாருங்கள்.

      முதன்மை குருமார்களாலும்: மத் 2:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “முதன்மை குரு” என்ற தலைப்பையும் பாருங்கள்.

      வேத அறிஞர்களாலும்: மத் 2:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்பையும், சொல் பட்டியலில் “வேத அறிஞர்கள்” என்ற தலைப்பையும் பாருங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்