உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 20:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 மற்ற தேசத்தாரிடம் அவரை ஒப்படைத்துவிடுவார்கள்; அவர்கள் அவரைக் கேலி செய்து, முள்சாட்டையால் அடித்து, மரக் கம்பத்தில் அறைந்து கொலை செய்வார்கள்.+ ஆனால், மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார்.

  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20:19

      மரக் கம்பத்தில் அறைந்து கொலை செய்வார்கள்: இங்கே ஸ்டவ்ரோ என்ற கிரேக்க வினைச்சொல் முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது; இந்த வினைச்சொல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மொத்தம் 40 தடவைக்கும் மேலாக வருகிறது. இது, ஸ்டவ்ரஸ் என்ற (‘சித்திரவதைக் கம்பம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள) கிரேக்க பெயர்ச்சொல்லின் வினை வடிவம். (மத் 10:38; 16:24; 27:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும், சொல் பட்டியலில் “மரக் கம்பம்”; “சித்திரவதைக் கம்பம்” என்ற தலைப்புகளையும் பாருங்கள்.) இந்த வினை வடிவம் செப்டுவஜன்ட்டில் எஸ்தர் 7:9-ல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மரக் கம்பத்தில் ஆமானைத் தொங்கவிடும்படி கட்டளை கொடுக்கப்பட்டதைப் பற்றி அந்த வசனம் சொல்கிறது. அதன் உயரம் 20 மீட்டருக்கும் (65 அடிக்கும்) அதிகம். பழங்கால கிரேக்க மொழியில், அது “மரக்கம்பங்களால் வேலி போடுவதை, கூர்முனைக் கம்பங்களை நாட்டுவதை” குறித்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்