-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 27பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
சாட்டையால் அடித்து: ரோமர்கள் குற்றவாளிகளை அடிப்பதற்கு ஒரு பயங்கரமான சாட்டையைப் பயன்படுத்தினார்கள். லத்தீனில் அதன் பெயர் ஃப்ளஜெல்லம். இந்தப் பெயரிலிருந்துதான் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொல் (ஃப்ராஜெல்லோயோ, “சாட்டையடி கொடுப்பது”) வந்திருக்கிறது. இந்தச் சாட்டையில், நிறைய கயிறுகளோ பின்னப்பட்ட தோல் வார்களோ ஒரு கைப்பிடியுடன் இணைக்கப்பட்டிருந்தன. சிலசமயங்களில், வலியைக் கூட்டுவதற்காக அந்தத் தோல் வார்களில் கூர்மையான எலும்புகளோ உலோகப் பொருள்களோ இணைக்கப்பட்டிருந்தன. அப்படிப்பட்ட சாட்டையடியால், ஆழமான உள்காயங்கள் ஏற்பட்டன, சதை நார்நாராகக் கிழிந்தது, சிலசமயங்களில் உயிர்கூட போனது.
-