உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • “பலங்கொண்டு திடமனதாயிரு“
    காவற்கோபுரம்—1987 | ஜனவரி 1
    • 3 இப்பொழுது, வெகு சீக்கிரத்தில் கடவுளுடைய ஜனங்கள் யெகோவாவின் புதிய ஒழுங்குமுறைக்குள் அணிவகுத்துச் செல்லுவார்கள். உலகில் இன்று உருவாகிவரும் சம்பவங்களின் நிமித்தமாக, நாம் தைரியத்தை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். இதை நாம் எவ்விதமாகச் செய்யலாம்? வாக்குப் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்க, யோசுவா ஆயத்தமாகையில் கடவுள் அவனுக்கு பின்வருமாறு கட்டளையிட்டிருந்தார்: “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப் பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு அதைவிட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.”—யோசுவா 1:7, 8.

      4 ஆம், அங்கேதான் இரகசியம் இருக்கிறது! தினந்தோறும் பைபிளை வாசியுங்கள். நமக்கு கடவுள் கொடுத்திருக்கும் கட்டளைகள் அதில் அடங்கியிருக்கின்றன. அதன் பேரில் தியானம் பண்ணுங்கள். அதன் நினைப்பூட்டுதல்களின்படி செய்யுங்கள். உங்களைச் சுற்றியுள்ள பொருளாசையுள்ள ஒழுக்கங்கெட்ட உலகினுள் விலகிச் சென்றுவிட உங்களை அனுமதியாதேயுங்கள். எந்த சூழ்நிலைமையில் நீங்கள் இருந்தாலும், ஞானத்தோடு செயல்படுங்கள். கடவுளுடைய வார்த்தையை படிப்பதன் மூலமாக நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் திருத்தமான அறிவையும், ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலையும் நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள். அதைக் குறித்து மற்றவர்களிடம் பேசுங்கள். அவ்விதமாகச் செய்து, யெகோவாவின் மீது சார்ந்திருப்பதன் மூலம், நீங்கள் நிச்சயமாகவே பலங்கொண்டு திடமனதாயிருந்து, ‘உங்கள் வழியை வாய்க்கப்பண்ணுவீர்கள்.’—சங்கீதம் 1:1-3; 93:5; 119:165 -168-ஐ ஒப்பிடவும்.

      5 யோசுவா “வாலிப பிராயம் முதற்கொண்டு மேசேயின் ஊழியக்காரனாக” இருந்து வந்திருக்கிறான். (எண்ணாகமம் 11:28) இந்த நெருங்கிய கூட்டுறவு, இவன் ஆவிக்குரிய பெலத்தைப் பெற்றுக்கொள்ள உதவியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோலவே, இன்றுள்ள வாலிப ஊழியர்கள், பக்தியுள்ள பெற்றோர்கள், பயனியர்கள், நீண்ட கால சாட்சிகள் இன்னும் மற்ற யெகோவாவின் உண்மைத் தவறாத ஊழியர்களோடு சேர்ந்து வேலை செய்வதன் மூலம் பெலத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படியாக வைராக்கியமுள்ளவர்களோடு சேர்ந்து வீட்டுக்கு வீடு சாட்சி கொடுப்பதில் ஈடுபடுவது, மகிழ்ச்சியைத் தருவதாகவும், நம்முடைய வாலிபர்களில் முதிர்ச்சியையும் ஊழியத்தில் முன்னேறவேண்டும் என்ற ஆசையையும் வளர்க்க உதவி செய்யக்கூடும். (அப்போஸ்தலர் 20:20, 21; ஏசாயா 40:28-31) யெகோவாவின் ராஜ்யத்தின் சார்பாக முழுநேர ஊழியத்தைக் காட்டிலும், இளம் சாட்சிகள் வேறு என்ன சிறப்பான இலக்கைக் கொண்டிருக்க முடியும்!—சங்கீதம் 35:18; 145:10-12.

  • “பலங்கொண்டு திடமனதாயிரு“
    காவற்கோபுரம்—1987 | ஜனவரி 1
    • 6 அமலேக்கோடே யுத்தம் பண்ண யோசுவாவை மோசே அனுப்பியபோது, “யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்தான்.” அவன் கீழ்ப்படிந்தான்; ஆகவே அவன் வெற்றியடைந்தான். நாமுங்கூட, யெகோவாவின் அமைப்பின் மூலமாக பெற்றுக்கொள்ளும் யுத்த கட்டளைகளுக்கு உன்னிப்பாக கவனம் செலுத்துவோமேயானால், யெகோவாவின் வெற்றியில் பங்குகொள்வோம். யெகோவா மோசேயிடம், அமலேக்கின் மீது அவருடைய வெற்றியை நினைவுகூரும் பொருட்டு அதை ஒரு புத்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவி கேட்கும்படி வாசிக்கச் சொன்னார். யோசுவா, யெகோவாவின் வெற்றியைக் குறித்து மற்றவர்களிடம் பேசுவதன் மூலம் அதை மேலுமாக மேன்மைப்படுத்தியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. அதே விதமாகவே நாம் இன்று கர்த்தராகிய ஆண்டவர் யெகோவாவின் மகத்தான செயல்களை யாவரறியச் செய்து, பொல்லாதவர்கள் மீது வரஇருக்கும் அவருடைய “நீதியைச் சரிக்கட்டும் நாளை”க் குறித்து அறிவிக்கலாம்.—யாத்திராகமம் 17:10, 13,14; ஏசாயா 61:1, 2; சங்கீதம் 145:1-4.

      7 வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு மோசே, 12 இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்களை அனுப்பியபோது, அவன் யோசுவாவையும் அனுப்பினான். திரும்பி வந்தபோது, வேவுக்காரரில் 10 பேர், கானானில் குடியிருந்தவர்களைக் குறித்து தங்கள் பயத்தை வெளியிட்டு எகிப்துக்கு திரும்பிப் போவதற்கு ஏற்பாடு செய்ய ஜனங்களை கூட்டி இணங்க வைத்தார்கள். ஆனால் யோசுவாவும் காலேபும் தைரியமாக இவ்விதமாகச் சொன்னார்கள்: “யெகோவா நம்மேல் பிரியமாயிருந்தால், அந்த தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். யெகோவாவுக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப் போயிற்று; யெகோவா நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை.”—எண்ணாகமம் 13:1 -14:38

      8 என்றாலும் இஸ்ரவேல் சபையார் தொடர்ந்து முறுமுறுத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே யெகோவா, தலையிட்டு, பயந்து தயக்கம் காட்டின இஸ்ரவேலரை நாற்பது வருஷங்கள் வனாந்தரத்தில் அலையும்படியாக தீர்ப்பளித்தார். காலேபையும் யோசுவாவையும் தவிர அவர்களுடைய யுத்த மனிதர் அனைவரும் வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தை பார்க்காமலே மரித்துப் போனார்கள். இன்று நமக்கு என்ன ஒரு எச்சரிப்பாக இது இருக்கிறது! யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு எதிராக ஒருபோதும் முறுமுறுக்காமல் இருப்போமாக. சாட்சி கொடுப்பதற்கு கடினமாக இருக்கும் பிராந்தியங்களைநாம் எதிர்பட்டாலும்கூட, ஜீவனைக் காக்கும் ராஜ்ய செய்தியோடு ஜனங்களின் வீடுகளுக்குச் செல்வதில் பலங்கொண்டு திடமனதாயிருப்போமாக. வெளியரங்கமாக சாட்சி கொடுப்பதற்கு பதிலாக, தங்களுடைய சகோதரர்களை பழிதூற்றி உலகத்தின் வழிகளுக்கு—மாதிரி படிவ எகிப்துக்கு—திரும்பிச் சென்றுவிடுவதையே விரும்பிய அந்த நவீன நாளைய விசுவாச துரோகிகளைப் போல நாம் இல்லாதிருப்போமாக.—எண்ணாகமம் 14:1-4, 26-30; லூக்கா 12:45, 46; அப்போஸ்தலர் 5:27-29, 41, 42-ஐ ஒப்பிடவும்.

  • “பலங்கொண்டு திடமனதாயிரு“
    காவற்கோபுரம்—1987 | ஜனவரி 1
    • யெகோவாவின் நாமம் முன்னிலைக்கு

      9 பன்னிரண்டு வேவுக்காரர்களின் பைபிள் பட்டியல், யோசுவாவை ஓசேயா என்று குறிப்பிடுகிறது. இதன் பொருள், “இரட்சிப்பு” என்பதாகும். ஆனால் இந்த இடத்தில் பதிவு இவ்விதமாகச் சொல்லுகிறது: “நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா [யெகோவா இரட்சிப்பாக இருக்கிறார் என்ற பொருள்] என்று மோசே பேரிட்டிருந்தான்.” மோசே இவ்விதமாக ஏன் யெகோவாவின் நாமத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தான்? ஏனென்றால் அந்த பெயர் நிலைநாட்டப்படுவதற்காகவே அடிப்படையில் யோசுவா ஊழியஞ் செய்தான். மோசே இஸ்ரவேலருக்குப் பின்னால் வலியுறுத்திக் காண்பிக்க இருந்த கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் யோசுவா உயிருள்ள ஒரு முன்மாதிரியாக ஆனான்: “உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக.” அவ்விதமாகச் செய்தததினால், ‘யெகோவா இரட்சிப்பாயிருக்கிறார்’ என்பதை கண்கூடாக காண்பிக்க அவன் சிலாக்கியம் பெற்றான்.—எண்ணாகமம் 13:8, 16; உபாகமம் 6:5.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்