-
1 யோவான் 3:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 நீதியான செயல்களைச் செய்துகொண்டே இருக்காத யாரும் கடவுளின் பக்கம் இல்லை. அதேபோல், தன் சகோதரன்மேல் அன்பு காட்டாத யாரும் கடவுளின் பக்கம் இல்லை.+ கடவுளுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும் இந்த உண்மையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். 11 நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான் ஆரம்பத்திலிருந்து நீங்கள் கேட்ட செய்தி.+ 12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன;+ ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன.+
-