-
யாத்திராகமம் 26:22-25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்துக்காக, அதாவது மேற்குப் பக்கத்துக்காக, ஆறு சட்டங்களைச் செய்ய வேண்டும்.+ 23 வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்திலுள்ள இரண்டு மூலைகளுக்கும் இரண்டு மூலைச்சட்டங்களைச் செய்ய வேண்டும். 24 ஒவ்வொரு மூலைச்சட்டத்துக்கும் இரண்டு கட்டைகளைக் கூம்பு வடிவத்தில் வைத்து, முதல் வளையம் இருக்கிற இடத்தில் இணைக்க வேண்டும். கூடாரத்தின் இரண்டு பக்கத்திலுள்ள மூலைச்சட்டங்களையும் இப்படித்தான் செய்ய வேண்டும். 25 ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் இரண்டிரண்டு பாதங்கள் இருக்க வேண்டும். அதாவது, 8 சட்டங்களுக்கு 16 வெள்ளிப் பாதங்கள் இருக்க வேண்டும்.
-