8 பின்பு யெகோவா ஆரோனிடம், “எனக்கு வருகிற காணிக்கைகளை உன் பொறுப்பில் விடுகிறேன்.+ இஸ்ரவேலர்கள் எனக்குக் காணிக்கையாகக் கொடுக்கிற பரிசுத்த பொருள்கள் எல்லாவற்றிலும் ஒரு பங்கை உனக்கும் உன் மகன்களுக்கும் தந்திருக்கிறேன். அது உங்களுடைய நிரந்தரப் பங்காக இருக்கும்.+
12 யெகோவாவாகிய எனக்கு முதல் விளைச்சலிலிருந்து+ அவர்கள் கொடுக்கிற உயர்தரமான எண்ணெய், உயர்தரமான புதிய திராட்சமது, உயர்தரமான தானியம் ஆகியவற்றை நான் உனக்குத் தருகிறேன்.+
2 உங்கள் கடவுளாகிய யெகோவா தரும் தேசத்தின் முதல் விளைச்சல் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சத்தை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு, உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு அதைக் கொண்டுபோக வேண்டும்.+