-
லேவியராகமம் 14:49-53பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
49 அந்த வீட்டைத் தீட்டிலிருந்து சுத்திகரிப்பதற்காக, இரண்டு பறவைகளையும் தேவதாரு மரக்கட்டையையும் கருஞ்சிவப்பு துணியையும் மருவுக்கொத்தையும் அவர் கொண்டுபோக வேண்டும்.+ 50 பின்பு, அந்தப் பறவைகளில் ஒன்றை ஊற்றுநீருள்ள ஒரு மண்பாத்திரத்தில் வைத்துக் கொல்ல வேண்டும். 51 தேவதாரு மரக்கட்டையையும் மருவுக்கொத்தையும் கருஞ்சிவப்பு துணியையும் உயிரோடிருக்கிற பறவையையும் எடுத்து, ஊற்றுநீரில் கொல்லப்பட்ட அந்தப் பறவையின் இரத்தத்தில் முக்கியெடுக்க வேண்டும். பின்பு, அந்த இரத்தத்தை அந்த வீட்டின் முன்னால் ஏழு தடவை அவர் தெளிக்க வேண்டும்.+ 52 கொல்லப்பட்ட பறவையின் இரத்தம், ஊற்றுநீர், உயிரோடிருக்கிற பறவை, தேவதாரு மரக்கட்டை, மருவுக்கொத்து, கருஞ்சிவப்பு துணி ஆகியவற்றால் அந்த வீட்டைத் தீட்டிலிருந்து அவர் தூய்மைப்படுத்த வேண்டும். 53 பின்பு, உயிரோடிருக்கிற பறவையை நகரத்துக்கு வெளியே வெட்டவெளியில் விட்டுவிட்டு அந்த வீட்டைச் சுத்திகரிக்க வேண்டும். அப்போது, அது தீட்டில்லாததாக இருக்கும்.
-