-
லேவியராகமம் 11:21-24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 கூட்டங்கூட்டமாகப் பறந்து போகவும் ஊர்ந்து போகவும் முடிந்த பூச்சிகளில், தாவிப்போவதற்கு நீளமான கால்கள் உள்ளவற்றை மட்டுமே நீங்கள் சாப்பிடலாம். 22 அவற்றில் நீங்கள் இதையெல்லாம் சாப்பிடலாம்: பல வகையான வெட்டுக்கிளிகள்,+ சிள்வண்டுகள், தத்துக்கிளிகள். 23 கூட்டங்கூட்டமாகப் பறந்து போகவும் ஊர்ந்து போகவும் முடிந்த மற்ற எல்லாவற்றையும் நீங்கள் அருவருக்க வேண்டும். 24 அவற்றால் நீங்கள் தீட்டுப்படுவீர்கள். அவை செத்த பின்பு அவற்றைத் தொடுகிற எவனும் சாயங்காலம்வரை தீட்டுப்பட்டிருப்பான்.+
-
-
லேவியராகமம் 17:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இஸ்ரவேலர்களில் ஒருவனாக இருந்தாலும் சரி, அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்த ஒருவனாக இருந்தாலும் சரி, தானாகச் செத்துப்போன மிருகத்தையோ காட்டு மிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தையோ சாப்பிட்டால்+ அவன் தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்,+ அதன்பின் சுத்தமாவான்.
-
-
உபாகமம் 14:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 பன்றியையும் நீங்கள் சாப்பிடக் கூடாது, ஏனென்றால் அதற்குக் குளம்புகள் பிளவுபட்டிருக்கும், ஆனால் அது அசைபோடாது. அது உங்களுக்கு அசுத்தமானது. நீங்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடவோ அவற்றின் பிணத்தைத் தொடவோ கூடாது.
-