-
ஆதியாகமம் 48:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 ஆனால் அவருடைய அப்பா கொஞ்சமும் சம்மதிக்காமல், “தெரியும் மகனே, எனக்குத் தெரியும். இவனும் ஒரு பெரிய ஜனக்கூட்டமாக ஆவான், இவனும் பலம்படைத்தவனாக ஆவான். ஆனால், இவனுடைய தம்பி இவனைவிட அதிக பலம்படைத்தவனாக ஆவான்.+ இவனுடைய தம்பியின் சந்ததி மாபெரும் தேசங்களைப் போலப் பெருகும்”+ என்றார். 20 பின்பு அவர்களைத் தொடர்ந்து ஆசீர்வதித்து,+
“இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது,
‘கடவுள் உன்னை எப்பிராயீமைப் போலவும் மனாசேயைப் போலவும் ஆசீர்வதிக்க வேண்டும்’ என்று சொல்லட்டும்”
என்றார். இப்படி, அவர் மனாசேயைவிட எப்பிராயீமை உயர்த்தினார்.
-