18 தப்பியோடிய தாவீது ராமாவில்+ இருந்த சாமுவேலிடம் வந்தார். சவுல் தனக்குச் செய்த எல்லாவற்றையும் அவரிடம் சொன்னார். அதன்பின் அவரும் சாமுவேலும் நாயோத்தில்+ தங்கியிருந்தார்கள்.
22பின்பு, தாவீது அங்கிருந்து அதுல்லாம் குகைக்குத் தப்பித்துப் போனார்.+ அவருடைய அண்ணன்களும் அப்பாவின் குடும்பத்தார் எல்லாரும் அதைக் கேள்விப்பட்டபோது, அவரிடம் போனார்கள்.
5 சிலகாலம் கழித்து, காத்+ தீர்க்கதரிசி தாவீதிடம், “மலையில் தங்க வேண்டாம். அங்கிருந்து யூதா தேசத்துக்குப் போய்விடுங்கள்”+ என்று சொன்னார். அதனால், தாவீது அங்கிருந்து ஏரேத் என்ற காட்டுக்குப் போனார்.