-
1 நாளாகமம் 18:14-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 இஸ்ரவேல் முழுவதையும் தாவீது ஆட்சி செய்துவந்தார்.+ தன்னுடைய மக்கள் எல்லாருக்கும் நீதி நியாயம் வழங்கிவந்தார்.+ 15 செருயாவின் மகன் யோவாப் படைத் தளபதியாக இருந்தார்.+ அகிலூத்தின் மகன் யோசபாத்+ பதிவாளராக இருந்தார். 16 அகிதூப்பின் மகன் சாதோக்கும் அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் குருமார்களாகச் சேவை செய்தார்கள். சவிஷா செயலாளராக இருந்தார். 17 யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர்களுக்கும்+ பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீது ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் அவருடைய மகன்கள் இருந்தார்கள்.
-