8 தேசத்தையும் ஆலயத்தையும் யோசியா ராஜா சுத்தப்படுத்திய பின்பு, தான் ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில் தன்னுடைய கடவுளான யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்க்க+ விரும்பினார்; அதற்காக, அத்சலியாவின் மகன் சாப்பானையும்,+ நகரத் தலைவர் மாசெயாவையும், பதிவாளரான யோவாகாசின் மகன் யோவாவையும் அனுப்பினார்.