-
2 நாளாகமம் 36:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 வருஷத்தின்* ஆரம்பத்தில், யோயாக்கீனையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்த விலைமதிப்புள்ள பொருள்களையும்+ பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்காகப் படைவீரர்களை நேபுகாத்நேச்சார் அனுப்பினான்.+ யோயாக்கீனுக்குப் பதிலாக, அவருடைய சித்தப்பாவான சிதேக்கியாவை யூதாவுக்கும் எருசலேமுக்கும் ராஜாவாக்கினான்.+
11 சிதேக்கியா+ ராஜாவானபோது அவருக்கு 21 வயது; அவர் எருசலேமில் 11 வருஷங்கள் ஆட்சி செய்தார்.+ 12 இவரும் தன்னுடைய கடவுளான யெகோவா வெறுக்கிற காரியங்களையே செய்துவந்தார். யெகோவாவின் கட்டளைப்படி எரேமியா தீர்க்கதரிசி இவரிடம் பேசினார்.+ ஆனாலும், அவர் முன்னால் சிதேக்கியா தாழ்மையாக நடந்துகொள்ளவில்லை.
-