-
எரேமியா 37:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
37 யோசியாவின் மகனாகிய சிதேக்கியா,+ யோயாக்கீமின் மகனாகிய கோனியாவுக்கு*+ பதிலாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஏனென்றால், பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் அவரை யூதாவின் ராஜாவாக நியமித்திருந்தான்.+ 2 ஆனால், சிதேக்கியாவும் அவருடைய ஊழியர்களும் அவருடைய ஜனங்களும் எரேமியா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொன்ன வார்த்தைகளைக் கேட்கவில்லை.
-
-
எரேமியா 38:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அதற்கு ராஜா, “அவன் உங்கள் கையில் இருக்கிறான்! ராஜாவால் உங்களைத் தடுத்து நிறுத்தவா முடியும்?” என்று சொன்னார்.
6 அதனால் அவர்கள் எரேமியாவைப் பிடித்து, ராஜாவின் மகனாகிய மல்கீயாவின் கிணற்றுக்குள் கயிறுகளினால் இறக்கினார்கள். அந்தக் கிணறு ‘காவலர் முற்றத்தில்’+ இருந்தது. அதில் தண்ணீரே இல்லை, வெறும் சேறுதான் இருந்தது. எரேமியா அதில் மூழ்க ஆரம்பித்தார்.
-