-
1 ராஜாக்கள் 15:20-22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 ஆசா ராஜா சொன்னதை பெனாதாத் ஏற்றுக்கொண்டான். அதனால், இஸ்ரவேல் நகரங்களைத் தாக்குவதற்காகத் தன்னுடைய படைத் தலைவர்களை அனுப்பினான். அவர்கள் ஈயோனையும்+ தாணையும்+ ஆபேல்-பெத்-மாக்காவையும் கின்னரேத் முழுவதையும் நப்தலி பகுதி முழுவதையும் நாசமாக்கினார்கள். 21 பாஷா அதைக் கேள்விப்பட்டதும், ராமா நகரத்தைக் கட்டுவதை* உடனடியாக நிறுத்திவிட்டு, திர்சாவுக்குப்+ போய் அங்கேயே குடியிருந்தார். 22 பின்பு ஆசா ராஜா, யூதாவிலிருந்த அத்தனை பேரையும், ஒருவர் விடாமல் எல்லாரையும், வரச் சொல்லிக் கட்டளையிட்டார். ராமா நகரத்தைக் கட்டுவதற்கு பாஷா பயன்படுத்திய கற்களையும் மரங்களையும் அவர்கள் அங்கிருந்து கொண்டுவந்தார்கள். அவற்றை வைத்து பென்யமீன் பகுதியில் கெபாவையும்+ மிஸ்பாவையும்+ ஆசா கட்டினார்.*
-