-
எண்ணாகமம் 25:11-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 “இஸ்ரவேலர்கள் மத்தியில் குருவாகிய ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமாகிய பினெகாஸ்+ எனக்காகப் பக்திவைராக்கியம் காட்டி, அவர்கள்மேல் எனக்கிருந்த கோபத்தைத் தணித்துவிட்டான்.+ அதனால்தான், நான் முழு பக்தியை* எதிர்பார்க்கிற கடவுளாக+ இருந்தாலும் இஸ்ரவேலர்களை அடியோடு அழிக்காமல் விட்டுவிட்டேன். 12 நீ அவனிடம் போய், அவனோடு நான் சமாதான ஒப்பந்தம் செய்யப்போகிறேன் என்று சொல். 13 குருத்துவச் சேவை அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் நிரந்தரமானது என்பதற்கு இந்த ஒப்பந்தம் அடையாளமாக இருக்கும்.+ ஏனென்றால், தன்னுடைய கடவுளுக்காகப் பக்திவைராக்கியம் காட்டி,+ இஸ்ரவேல் ஜனங்களுக்காகப் பாவப் பரிகாரம் செய்தான்” என்றார்.
-