5 உன் கண்கள்+ என்னைச் சுண்டியிழுக்கின்றன.
உன் பார்வையை என்னைவிட்டுத் திருப்பிவிடு.
கீலேயாத் மலைச் சரிவுகளில் இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தை உன் கூந்தல்.+
6 குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறிக் கூட்டம் உன் பற்கள்,
அவை எல்லாவற்றுக்குமே இரட்டைக் குட்டிகள் இருக்கின்றன.
ஒன்றுகூட குறையாமல் இருக்கின்றன.
7 முக்காட்டுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உன் கன்னங்கள்,
வெடித்த மாதுளம் பழங்கள்.