-
மத்தேயு 27:12-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 ஆனால், முதன்மை குருமார்களும் பெரியோர்களும் அவர்மேல் குற்றம்சாட்டியபோது அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.+ 13 பின்பு பிலாத்து அவரிடம், “இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்கள், அதையெல்லாம் நீ கேட்கவில்லையா?” என்றார். 14 ஆனால் அவர் பதில் சொல்லவில்லை, ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை; அதனால் ஆளுநர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
-
-
அப்போஸ்தலர் 8:32, 33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 அவர் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்த வேதவசனங்கள் இவைதான்: “வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும், மயிர் கத்தரிப்பவன் முன்னால் அமைதியாக இருக்கிற ஆட்டுக்குட்டியைப் போலவும் அவர் வாயே திறக்கவில்லை.+ 33 அவர் அவமானப்படுத்தப்பட்டபோது, அநியாயமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டார்.+ அவருடைய வம்சத்தின் விவரங்களைப் பற்றி யார் சொல்வார்கள்? அவருடைய உயிர் இந்தப் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதே.”+
-