-
2 நாளாகமம் 20:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அப்போது, “உங்களோடு போர் செய்ய கடலோர* பகுதியில் இருக்கிற ஏதோமிலிருந்து+ பெரிய படை வந்திருக்கிறது; அந்தப் படை அத்சாத்சோன்-தாமாரில், அதாவது என்-கேதியில்,+ முகாம்போட்டிருக்கிறது” என்ற செய்தி யோசபாத்துக்குக் கிடைத்தது. 3 அதைக் கேட்டதும் யோசபாத் பயந்துபோனார். யெகோவாவைத் தேட வேண்டுமென்று மனதில் தீர்மானித்தார்.+ யூதா மக்கள் எல்லாரும் விரதமிருக்க வேண்டுமென்று அறிவித்தார்.
-
-
எஸ்தர் 4:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அதைக் கேட்ட எஸ்தர் மறுபடியும் ஆத்தாகுவை மொர்தெகாயிடம் அனுப்பி, 16 “நீங்கள் சூசானில் இருக்கும் யூதர்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டி எனக்காக விரதமிருங்கள்.+ மூன்று நாட்களுக்கு ராத்திரியும் பகலும் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம்.+ என்னுடைய பணிப்பெண்களோடு சேர்ந்து நானும் விரதமிருக்கிறேன். அதன்பின், சட்டத்தை மீறி ராஜாவிடம் போகிறேன்; என் உயிர் போனால் போகட்டும்” என்று சொல்லச் சொன்னாள்.
-