-
2 நாளாகமம் 36:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+
-
-
ஏசாயா 65:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 பிடிவாதமான ஜனங்களைப்+ பார்த்து நாளெல்லாம் என் கைகளை நீட்டிக்கொண்டிருக்கிறேன்.
அவர்கள் மனம்போன போக்கில் போய்,+
கெட்ட காரியங்களைச் செய்கிறார்கள்.+
-
எரேமியா 7:24-26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 அவர்கள் அதைக் காதில் வாங்கவே இல்லை.+ அதற்குப் பதிலாக, தங்களுடைய திட்டங்களின்படியே நடந்தார்கள், தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ முன்னோக்கிப் போவதற்குப் பதிலாகப் பின்னோக்கியே போனார்கள். 25 உங்கள் முன்னோர்கள் எகிப்திலிருந்து வந்த நாளிலிருந்து இந்த நாள்வரை நிலைமை இப்படித்தான் இருந்திருக்கிறது.+ நான் என்னுடைய ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகள் எல்லாரையும் தினமும் அனுப்பினேன்; திரும்பத் திரும்ப அனுப்பினேன்.+ 26 ஆனால், அவர்கள் எதையுமே காதில் வாங்கவில்லை.+ முரட்டுப் பிடிவாதம் பிடித்தார்கள். அவர்களுடைய முன்னோர்களைவிட மோசமாக நடந்துகொண்டார்கள்!
-
-
எரேமியா 35:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 என் ஊழியர்களான தீர்க்கதரிசிகள் எல்லாரையும் நான் திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி,+ ‘தயவுசெய்து நீங்கள் எல்லாரும் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்துங்கள்.+ நல்ல வழியில் நடங்கள். மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் வணங்காதீர்கள். அப்போதுதான், உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் தொடர்ந்து வாழ்வீர்கள்’+ என்று சொன்னேன். ஆனால், நீங்கள் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.
-
-
-