-
ஏசாயா 34:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 யெகோவாவாகிய நான் போஸ்றாவில் ஒரு பலியைச் செலுத்தப்போகிறேன்.
ஏதோமில் உயிர்களைக் கொன்று குவிக்கப்போகிறேன்.+
அதற்காக யெகோவாவாகிய என்னிடம் ஒரு வாள் இருக்கிறது.
அந்த வாள் முழுவதிலும் இரத்தமும் கொழுப்பும்+ படியும்.
செம்மறியாட்டுக் கடாக் குட்டியின் இரத்தமும் வெள்ளாடுகளின் இரத்தமும்
செம்மறியாட்டுக் கடாக்களுடைய சிறுநீரகங்களின் மேலுள்ள கொழுப்பும் அதில் படியும்.
7 அவற்றோடு காட்டு எருதுகளும்
புஷ்டியான காளைகளும் இளம் காளைகளும் வெட்டிச் சாய்க்கப்படும்.
தேசத்தில் இரத்த ஆறு ஓடும்.
அதன் மண் கொழுப்பினால் சேறாகிவிடும்.”
-
-
எசேக்கியேல் 39:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 நீங்கள் பலம்படைத்தவர்களின் சதையைத் தின்று, உலகத் தலைவர்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள். அவர்கள் எல்லாரும் பாசானில் இருக்கிற கொழுத்த செம்மறியாட்டுக் கடாக்களையும் செம்மறியாட்டுக் குட்டிகளையும் வெள்ளாடுகளையும் காளைகளையும் போன்றவர்கள்.
-