-
எரேமியா 19:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 இங்கே பாகாலின் ஆராதனை மேடுகளைக் கட்டி, பாகாலுக்குத் தகன பலி கொடுப்பதற்காக உங்கள் பிள்ளைகளை நெருப்பில் சுட்டெரிக்கிறீர்கள்.+ இதை நான் செய்யச் சொல்லவே இல்லை. இப்படிச் செய்யும்படி நான் கட்டளை கொடுக்கவே இல்லை. இந்த யோசனைகூட எனக்கு* வந்ததே இல்லை.”’+
6 அதனால், யெகோவா சொல்வது இதுதான்: ‘“நாட்கள் வரும். அப்போது இந்த இடம் தோப்பேத் என்றோ பென்-இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ அழைக்கப்படாமல், படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே அழைக்கப்படும்.+
-
-
எரேமியா 32:35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
35 அது போதாதென்று, பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்*+ பாகாலின் ஆராதனை மேடுகளைக் கட்டி, அங்கே மோளேகு தெய்வத்துக்கு அவர்களுடைய மகன்களையும் மகள்களையும் நெருப்பில் பலி கொடுத்தார்கள்.*+ இப்படிப்பட்ட அருவருப்பான பாவச் செயலைச் செய்யும்படி நான் யூதாவுக்குக் கட்டளை கொடுக்கவே இல்லை.+ இந்த யோசனைகூட எனக்கு* வந்ததே இல்லை.’
-