-
2 ராஜாக்கள் 17:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரையும், தரிசனக்காரர்கள் ஒவ்வொருவரையும் அனுப்பி இஸ்ரவேலையும் யூதாவையும் எச்சரித்துக்கொண்டே இருந்தார்.+ “பொல்லாத வழிகளைவிட்டு மனம் திருந்துங்கள்!+ என்னுடைய கட்டளைகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களுடைய முன்னோர்கள் மூலம் நான் கொடுத்த எல்லா சட்டங்களுக்கும், என்னுடைய தீர்க்கதரிசிகள் மூலம் நான் சொன்ன எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று சொல்லியிருந்தார். 14 ஆனால், அவர் பேச்சை அவர்கள் கேட்கவில்லை. தங்களுடைய கடவுளான யெகோவாமீது விசுவாசம் வைக்காத முன்னோர்களைப் போலவே இவர்களும் முரட்டுப் பிடிவாதம் பிடித்தார்கள்.+
-
-
எரேமியா 7:12-14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 “‘நீங்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டே இருந்தீர்கள். நான் மறுபடியும் மறுபடியும் உங்களோடு பேசியும் நீங்கள் கேட்கவில்லை.+ உங்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன், ஆனால் நீங்கள் பதில் சொல்லவே இல்லை.+ 13 அதனால், என் பெயரின் மகிமைக்காக சீலோவில்+ நான் முதன்முதலில் தேர்ந்தெடுத்த இடத்துக்கு இப்போது போங்கள்;+ என் ஜனங்களான இஸ்ரவேலர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக+ நான் அதை என்ன செய்தேன் என்று பாருங்கள்’ என்று யெகோவா சொல்கிறார். 14 ‘சீலோவுக்குச் செய்ததைப் போலவே+ நீங்கள் நம்பியிருக்கிற+ இந்த ஆலயத்துக்கும், அதாவது என் பெயரைத் தாங்கியிருக்கிற இந்த இடத்துக்கும்,+ செய்யப்போகிறேன். உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த இந்தத் தேசத்தைக்கூட அதேபோல் பாழாக்கப்போகிறேன்.
-