-
எரேமியா 27:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 இப்போது என் ஊழியனும் பாபிலோன் ராஜாவுமான நேபுகாத்நேச்சாரின் கையில் எல்லா தேசங்களையும் கொடுத்திருக்கிறேன்.+ காட்டு மிருகங்களைக்கூட அவனுக்கு அடிபணிய வைத்திருக்கிறேன். 7 எல்லா தேசத்தாரும் அவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வார்கள். ஆனால், பிற்பாடு அவனுடைய தேசமே கைப்பற்றப்படும்.+ பல தேசத்தாரும் பெரிய பெரிய ராஜாக்களும் அவனை அடிமைப்படுத்துவார்கள்.’+
-
-
சகரியா 2:7-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 “சீயோன் ஜனங்களே, வாருங்கள்! பாபிலோன் நகரத்தில் குடியிருக்கிறவர்களே, அங்கிருந்து தப்பித்து வாருங்கள்!+ 8 கடவுள் தன்னுடைய பெயருக்கு மகிமை சேர்த்த பின்பு, உங்களைச் சூறையாடிய தேசங்களிடம்+ என்னை அனுப்பினார். பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்.+ 9 இப்போது நான் அந்தத் தேசங்களுக்கு எதிராக என் கையை ஓங்குவேன். அவர்களுடைய அடிமைகளே அவர்களைச் சூறையாடுவார்கள்.’+ அப்போது, பரலோகப் படைகளின் யெகோவாதான் என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்.
-