-
மாற்கு 3:16-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 அந்த 12 பேர் இவர்கள்தான்:+ சீமோன் (இவருக்கு பேதுரு என்றும் பெயர் வைத்தார்),+ 17 செபெதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரன் யோவான் (இவர்கள் இரண்டு பேருக்கும் பொவனெர்கேஸ் என்று பெயர் வைத்தார், இதற்கு “இடிமுழக்க மகன்கள்” என்று அர்த்தம்),+ 18 அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, பக்திவைராக்கியமுள்ள* சீமோன், 19 இயேசுவைப் பிற்பாடு காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.
பின்பு, அவர் ஒரு வீட்டுக்குள் போனார்.
-
-
லூக்கா 6:13-16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 விடிந்ததும் தன்னுடைய சீஷர்களை வரவழைத்து அவர்களில் 12 பேரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களுக்கு அப்போஸ்தலர்கள்* என்று பெயர் வைத்தார்.+ 14 அந்த 12 பேர் இவர்கள்தான்: சீமோன் (இவருக்கு பேதுரு என்று பெயர் வைத்தார்), இவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு,+ பர்த்தொலொமேயு, 15 மத்தேயு, தோமா,+ அல்பேயுவின் மகன் யாக்கோபு, “பக்திவைராக்கியமுள்ளவன்” என்று அழைக்கப்பட்ட சீமோன், 16 யாக்கோபின் மகன் யூதாஸ், துரோகியாக மாறிய யூதாஸ் இஸ்காரியோத்து.
-