-
மாற்கு 9:2-8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 ஆறு நாட்களுக்குப் பின்பு, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் மட்டும் கூட்டிக்கொண்டு உயரமான ஒரு மலைக்கு இயேசு போனார்; அங்கே அவர்கள் முன்னால் அவருடைய தோற்றம் மாறியது.+ 3 அவருடைய மேலங்கி பளபளவென்று மின்ன ஆரம்பித்தது. பூமியில் இருக்கிற எந்தச் சலவைக்காரராலும் வெண்மையாக்க முடியாதளவுக்கு வெள்ளைவெளேரென ஆனது. 4 அதோடு, எலியாவும் மோசேயும் தோன்றி இயேசுவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். 5 அப்போது பேதுரு, “ரபீ,* இங்கே இருப்பது எங்கள் பாக்கியம். உங்களுக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை நாங்கள் போடுகிறோம்” என்று இயேசுவிடம் சொன்னார். 6 உண்மையில், என்ன சொல்வதென்றே தெரியாமல் அப்படிச் சொன்னார். ஏனென்றால், அவர்கள் எல்லாரும் மிகவும் பயந்துபோயிருந்தார்கள். 7 பின்பு, ஒரு மேகம் தோன்றி அவர்கள்மேல் நிழலிட்டது; அப்போது, “இவர் என் அன்பு மகன்;+ இவர் சொல்வதைக் கேளுங்கள்”+ என்று அந்த மேகத்திலிருந்து ஒரு குரல்+ ஒலித்தது. 8 உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள், ஆனால் இயேசுவைத் தவிர வேறு யாரையும் காணவில்லை.
-
-
லூக்கா 9:28-36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 அவர் இந்த வார்த்தைகளைச் சொல்லி சுமார் எட்டு நாட்களுக்குப் பின்பு, பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம் செய்வதற்காக ஒரு மலைமேல் ஏறினார்.+ 29 அவர் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது, அவருடைய முகத்தின் தோற்றம் மாறியது, அவருடைய உடை வெண்மையாக மின்னியது. 30 அவரோடு மோசே, எலியா ஆகிய இரண்டு பேரும் பேசிக்கொண்டிருந்தார்கள். 31 மகிமையுடன் தோன்றிய இவர்கள் எருசலேமில் நிறைவேறப்போகிற+ அவருடைய இறுதிப் பயணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். 32 பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் அரைத்தூக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் விழித்துக்கொண்டபோது, அவருடைய மகிமையையும் அந்த இரண்டு பேர் அவருடன் நின்றுகொண்டிருந்ததையும் பார்த்தார்கள்.+ 33 அந்த இரண்டு பேரும் அவரைவிட்டுப் புறப்பட்டபோது பேதுரு இயேசுவிடம், “போதகரே, இங்கே இருப்பது எங்கள் பாக்கியம். உங்களுக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை நாங்கள் போடுகிறோம்” என்று சொன்னார்; அவர் என்ன சொன்னார் என்று அவருக்கே தெரியவில்லை. 34 அவர் இதைச் சொல்லிக்கொண்டிருந்தபோதே, ஒரு மேகம் தோன்றி அவர்கள்மேல் நிழலிடத் தொடங்கியது; அது அவர்களைச் சூழ்ந்துகொண்டபோது அவர்கள் பயந்துபோனார்கள். 35 அப்போது, “இவர் என் மகன், இவரை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்;+ இவர் சொல்வதைக் கேளுங்கள்”+ என்று அந்த மேகத்திலிருந்து ஒரு குரல்+ ஒலித்தது. 36 அந்தச் சமயத்தில் இயேசு மட்டும் தனியாக இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் தாங்கள் பார்த்த எதையும் அந்த நாட்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள்.+
-